கோவை திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி உயிரிழப்பு.. கொந்தளித்த அண்ணாமலை
கோவை: மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொண்டு திருத்தத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை அன்னூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட 75 வயது மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி, அதை 125 நாள் வேலை திட்டமாக மாற்றியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, பாஜக வெறுப்பு அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஒட்டர்பாளையம் பகுதியில் திமுக சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை தெற்கு திமுக சார்பில் அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிச்சாமி ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வைப்பதற்காக அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். மேல் கிணறு பகுதியைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற மூதாட்டியும் அழைத்துவரப்பட்டார்.
மூதாட்டி உயிரிழப்பு
கூலி தொழிலாளியான பொன்னம்மாள் ஆர்ப்பாட்டத்திற்காக நீண்ட நேரமாக வெயிலில் நின்றதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் நடந்து கொண்டிருக்கும்போதே அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தோர் அவரை மீட்டு அன்னூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதியவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துவந்து வெயிலில் நிற்க வைத்ததே பொன்னம்மாளின் மரணத்திற்கு காரணம் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தற்போதுவரை திமுக நிர்வாகிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அண்ணாமலை கண்டனம்
இதுகுறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில், திமுக கட்சி ஆர்ப்பாட்டத்திற்காக, 75 வயது பொன்னம்மாள் என்ற வயது முதிர்ந்த மூதாட்டியை அழைத்து வந்து, கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து, அவரது உயிரிழப்பிற்கு காரணமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது.
திமுக ஆர்ப்பாட்டத்துக்கு வரவில்லையென்றால், நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதியம் தர முடியாது என்று மிரட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து வயது முதியவர்களை வாகனத்தில் அழைத்து வருவது திமுகவினரின் வழக்கம். தனது அரசியல் லாபத்திற்காக அரங்கேற்றும் தேர்தல் நாடகங்களுக்கு, ஏழை எளிய மக்களின் உயிர்களை பலி வாங்கும் திமுகவின் அராஜக அரசியலை, தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது.
நடவடிக்கை தேவை
மனிதாபிமானமே இல்லாமல் முதியவர்களை சிரமப்படுத்தி, ஒரு உயிரிழப்பிற்கு காரணமான அன்னூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.
-
அமுதா அக்காவுக்கு சிரிப்பு தங்கல.. நாதக வேட்பாளரை பூத்தூவி வரவேற்ற திமுகவினர்! இது கூட தெரியாதா? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக!












Click it and Unblock the Notifications