விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) முன்வைத்த சில முக்கிய மாற்றங்களை கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டத்தில் முக்கியமானதாக திகழும் கோயம்புத்தூரில் மிகப்பெரிய அளவிலான கிரிக்கெட் மைதானத்தை உருவாக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டு, நிலத்தையும் ஒதுக்கியிருந்த நிலையில், தற்போது விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதை மறு ஆய்வு செய்வதாக அறிவித்துள்ளது.

Coimbatore International Cricket Stadium

TNCAவின் புதிய ஆலோசனை

சமீபத்தில் TNCA தலைவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து, கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டத்தில் சில மாற்றங்களை வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, TNCA பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் இணைந்து கூட்டு ஆய்வு நடத்த உள்ளனர்.

ஆய்வு முடிவுக்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். அதுவரை திட்டப் பணிகளில் முன்னேற்றம் இருக்காது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

திட்டத்தின் பின்னணி

2025 நவம்பர் மாதம் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) பொதுத் தனியார் கூட்டு முறையில் (PPP) சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க விருப்ப மனுக்களை (EoI) சமர்பிக்க அழைப்பு விடுத்தது.

ஒண்டிபுதூர் மேம்பாலம் அருகே உள்ள திறந்தவெளி சிறை வளாகம் இந்தத் திட்டத்துக்கான இடமாக கருதப்பட்டது. 25,000 முதல் 30,000 இருக்கைகள் கொண்ட மைதானம் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டிருந்தது. தற்போது தவெக அரசு இத்திட்டத்தை புதிய கோரிக்கைகள் மூலம் மறுஆய்வு செய்யும் காரணத்தால் தாமதமாகியுள்ளது.

கோயம்புத்தூருக்கு பெரிய கனவு

கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு 50,000க்கும் மேற்பட்ட இருக்கை கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட மைதானத்தை உருவாக்க வேண்டும் என கருத்து நிலவுகிறது. மெட்ரோ ரயில் இணைப்பு, எதிர்கால RRTS நிலையம், ரிங் சாலை, விமான நிலைய இணைப்பு, இசை நிகழ்ச்சிகளுக்கான உள்கட்டமைப்பு, மாநாட்டு மற்றும் கண்காட்சி வளாகங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் நிகழ்வு மையமாக கோயம்புத்தூரை உருவாக்க வேண்டும்.

முக்கியமாக, 50,000 பேர் ஒரே நேரத்தில் வெளியேறும் நிலையில் போக்குவரத்து வசதி முதலில் திட்டமிடப்பட வேண்டும் என்பது தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது. போக்குவரத்து திட்டமிடல் சரியாக இருந்தால், மைதானம் தானாகவே வெற்றி பெறும் என கருத்து நிலவுகிறது

கோயம்புத்தூர் மட்டுமல்ல, மேற்கு தமிழ்நாட்டின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. இத்திட்டம் பகுதியின் தொழில், வணிகம் மற்றும் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+