கோவை மாணவி தற்கொலை செய்த சோகம் மறையவில்லை.. அதற்குள் அமைச்சர் இப்படி செய்யலாமா? ஜெயக்குமார் கேள்வி
சென்னை: கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்த நிலையிலும், தமிழக அமைச்சர் தலைமையில் குழந்தைகள் தின விழா கொண்டாடியது தவறான செயல் என்று, அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
Recommended Video
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொருக்குப்பேட்டை மக்களுக்கு மதிய உணவு வழங்கிய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:

திறமையில்லை
ஆளும் கட்சி செய்ய தவறிய, மக்கள் பணியை அதிமுக தொடர்ந்து செய்து வருகிறது. நாங்கள் மேற்கொண்ட பராமரிப்பு பணிகளை, திமுக அரசு செய்திருந்தால் மழை நீர் வெளியேறி இருக்கும். மழை நீர் வடிகாலை முறையாக தூர்வாரவில்லை. திமுகவிற்கு நிர்வாக திறமை இல்லாத காரணதால் சென்னை மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாஸ்டர் பிளான்
எங்களுடைய மாஸ்டர் பிளான் காரணமாக பல இடங்களில் மழை நீர் வற்றியது. மழை நீர் வற்றாமல் இருக்கும் இடங்களில் எங்கள் திட்டங்களில், திமுக சரியாக பராமரிப்பு பணிகளை செய்யாதது தான் காரணம். திமுக ஆட்சியில் விளம்பர அரசியல் தான் நடக்கிறது.

கொளத்தூர் தொகுதி
கொளத்தூர் தொகுதி எப்படி இருக்கிறது என்று போய் பாருங்கள், மழை நீர் தேங்கியது வெளியேறவில்லை. திமுகவின் தோழமை கட்சிகள் தான் தற்போது அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் பல இடங்களில் குடிநீருடன் கழிவு நீர் கலந்துவிட்டது.

கோவை மாவட்டம்
கோவையில் மாணவி பாலியில் வன்புணர்வினால் தற்கொலை செய்து மாவட்டமே வருத்தத்தில் இருக்கும்போது, அங்கு அமைச்சர் தலைமையில், குழந்தைகள் தினத்தைகொண்டாடுவது திமுகவின் புத்தியை காட்டுகிறது. அந்த மாணவி, எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இவ்வாறு ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications