Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எமனான இருமல் மருந்து.. பறிபோன 14 உயிர்கள்! தமிழ்நாட்டில் பயம் தேவையில்லை.. அமைச்சர் மா.சு நம்பிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து உட்கொண்ட 14 குழந்தைகள் பலியான சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உரிய நடவடிக்கைகளால் எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

இதுதொடர்பாக சென்னையில் பேசியுள்ள அவர்,"கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழக மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு அவசர கடிதம் பெறப்பட்டது

அக்கடிதத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப் மருத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Coldrif Syrup Tragedy

கோல்ட்ரிஃப் சிரப்

இது தொடர்பாக, அன்றைய தினமே சுமார் 4.00 மணியளவில், துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் தலைமையிலான குழு, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ள விரைந்தனர். அக்குழு (01-10-2025 to 02-10-2025) மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதிகள். 1945-இன் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) Balch No: SR-13 உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வின் முடிவின் டைதிலீன் கிளைகால் (Diethylene Glycol. DEG) என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள். கோல்ட்ரிஃப் சிரப்பில் (Coldrif Syrup) 48.6 சதவீதம் (48.6% w/v) இருப்பதாக 02-10-2025 அன்று கண்டறியப்பட்டது.

குழந்தைகள் மரணம்

மேலும் 01-10-2025 அன்றே. துணை மருந்து கட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) விற்பனை தடை செய்யப்பட்டது (Sales Banned). இந்த சந்தேகத்திற்குரிய மருந்து பொது மக்களை சென்றடைய கூடாது, எந்த உயிரிழப்பும் ஏற்பட கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு இந்த அதிரடி உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள், 01-10-2025 அன்றே மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.

உற்பத்தி நிறுத்தம்

இதையடுத்து, 03-10-2025 அன்று, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள், நிறுவனத்திற்கு பொது நலம் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு (Stop Production Order) பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது. மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது (Cancellation) என விளக்கம் கேட்டு குறிப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.

மருந்து கட்டுப்பாட்டு துறை

இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையால் மிக துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மருந்து நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய மருந்தை ஆய்வுக்குட்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள மருந்துகளையும், தமிழகத்தில் விற்பனையில் உள்ள மருந்துகளையும் தடைச்செய்து, அம்மருந்தில் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் டைதிலீன் கிளைகால் (DEG) இருப்பதை கண்டறிந்து, அந்நிறுவனத்தின் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தி மூடப்பட்டு, மேல்நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் உரிமங்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்

இந்த தகவல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் உடனடியாக, 03-10-2025 அன்று மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும். தகவல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில், சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் கீழ் செயல்படும் மருந்து கட்டுப்பாட்டு துறையின் மூலம் தமிழக அரசால் துரிதமாக மக்கள் நலம் கருதி செய்து முடிக்கப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+