கட்டாயப் படுத்தி விளையாட்டு.. மாரடைப்பால் சென்னைக் கல்லூரி மாணவி மரணம்.. மாணவர்கள் போராட்டம்!
விளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கட்டாயப்படுத்தி விளையாட வைத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஜெ.மஹிமா (18). இவர் கிழக்குத் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வேதியியல் படித்து வந்தார். இவர் கடந்த திங்களன்று மாலை 5.30 மணியளவில் சகமாணவிகளுடன் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடியுள்ளார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தோழிகள், கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் அவரை அருகில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மஹிமாவைச் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
உடற்கூறு ஆய்வில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மஹிமாவின் இந்த திடீர் மரணத்தால் அவரது குடும்பத்தாரும், தோழிகளும் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையும் கட்டாயப்படுத்தி விளையாட வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த மஹிமாவை விளையாடும்படி கட்டாயப்படுத்தியதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக அவர்கள் போரட்டம் நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி நிர்வாகம் இது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில், ''மஹிமாவை விளையாடச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அவர் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார் என்று முன்பே அறிவுறுத்தவில்லை'’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications