பெரவள்ளூரில் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மர்ம நபர்
Recommended Video
சென்னை: சென்னை அருகே பெரவள்ளூரில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவரை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தி விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரவள்ளூரை சேர்ந்த தினேஷ் குமார் பல்லாவரத்தில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை முருகேசனுடன் இருசக்கர வாகனத்தில் நுங்கம்பாக்கம் சென்று விட்டு திரும்பும்போது அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் நுங்கு வாங்குவதற்காக ஓரமாக வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி நிற்கும்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் தினேஷ்குமாரை கத்தியால் தாக்கியுள்ளார்.
தினேஷ்குமார் கையால் தடுக்க முயற்சி செய்ததால் இடது கை மற்றும் கழுத்தில் கத்தி குத்து ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த அடையாளம் தெரியாத நபர் அருகில் நின்றிருந்த அயனாவரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஜான்சன் என்பவரையும் தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தயாராக நின்றிருந்த மற்றொருவருடன் தப்பி சென்றுள்ளார்.
காயமடைந்த தினேஷ் குமார் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு ஐ.சி.எப். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













Click it and Unblock the Notifications