வணக்கம் வைக்கலையாம்.. அதுதான் வெட்டிருக்காங்க.. பல்லாவரம் பட்டாக் கத்தி மோதலின் பரபர பின்னணி!
கல்லூரி மாணவர்கள் மீண்டும் பட்டா கத்தியுடன் மோதிக் கொண்டனர்
Recommended Video
சென்னை: வணக்கம் வெக்கலையாம்.. இதுதான் பிரச்சனை.. அதனால் காலேஜ் கேட் வாசலிலேயே நிற்க வைத்து, மாணவனை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார் சட்டம் படிக்கும் சக மாணவன்!
ரூட் தல விவகாரத்தில் போலீசார் செய்த கெடுபிடியால் இப்போதுதான் மாணவர்கள் அடங்கி உள்ளதாக நினைத்தால், திரும்பவும் ஆரம்பித்து விட்டார்கள்.
கல்லூரி மாணவர்கள் பஸ் தவிர, ரயில்களிலும் காலேஜிக்கு வந்து போவார்கள். அப்படி வரும்போது, கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடனே ரயிலில் பயணம் செய்வார்கள்.

வீடியோக்கள்
அந்த சமயங்களில் ஆயுதங்களை தரையில் தேய்த்து சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பர். இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகியதுடன், போலீசாரும் இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.

எச்சரிக்கை
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ்சுக்குள்ளேயே மோதி கொண்டனர். நடு ரோட்டில் அரிவாள் வெட்டும் நடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனால் சென்னை போலீசாரும் கல்லூரி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, கடுமையாக எச்சரித்தே வைத்திருந்தனர்.

சண்டை
இப்போது மீண்டும் பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டுள்ளனர். பல்லாவரம் கல்லூரி மாணவர்கள் இடையே இந்த சண்டை எழுந்துள்ளது. இவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் ஆவர். இங்கு கார்த்திக் என்ற மாணவர் 5-ம் வருடம் படித்து வருகிறார். அதேபோல, அஸ்வின் என்ற மாணவர், வேறு ஒரு கல்லூரியில் படித்துவிட்டு, இந்த கல்லூரியில் 5-ம் வருடம் புதிதாக வந்து சேர்ந்துள்ளார்.

கார்த்திக்
இங்கு கார்த்திக் சீனியர் என்பதால் ரவுடி போலவே வலம் வந்துள்ளார். கார்த்திக்கை எந்த மாணவர்கள் பார்த்தாலும் பயந்து நடுங்குவார்களாம்.. எல்லாரும் கார்த்திக்கு மரியாதை தந்துதான் ஆகணுமாம். ஆனால் அஸ்வின் கார்த்திக்குக்கு மரியாதை தரவில்லை என்று தெரிகிறது. கார்த்திக்கை பார்க்கும்போது, அஸ்வின் வணக்கம் வைப்பது இல்லையாம். இதுதான் கார்த்திக்கின் ஆத்திரம்!

வணக்கம்
இன்று காலேஜ் கேட் வாசலில் கார்த்திக் நின்று கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த அஷ்வின், வழக்கம்போல் கார்த்திக்கை பார்த்ததும் வணக்கம் வெக்காமல் அவரை கடந்து சென்றுள்ளார். ஏற்கனவே செம கடுப்பில் இருந்த கார்த்திக், அஸ்வின் தன்னை பார்த்தும் கண்டுக்காமல் செல்லவும், அங்கேயே கேட்டில் நிற்க வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் அஸ்வினுக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, அவரைஉடனடியாக கிரீம்ஸ் ரோடில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதிர்ச்சி வீடியோ
மாணவர்களிடையே இப்படி ஒரு மோதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். காலேஜ் வாசலில் கார்த்திக், அஸ்வினை அரிவாளால் வெட்டிய வீடியோ வெளியாகி உள்ளது. இதை கண்டதும், மக்கள் மேலும் பீதியிலும், கலக்கத்திலும் உறைந்துள்ளனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications