“தேதி குறித்து கள் இறக்குவேன்.. என்னை சுடுங்க பார்க்கலாம்..” ஆலங்குளம் தொகுதியில் சீமான் சவால்!
தென்காசி: "பனை ஏறும் தொழிலாளியை காலில் சுட்டுள்ளார்கள். நான் கள் இறக்குகிறேன். மீண்டும் தேதி குறித்து கள் இறக்குவேன். என்னை வந்து சுடுங்கள் பார்க்கலாம்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன். இவர் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பனை தொழிலாளியை சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலங்குளத்தில் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "உங்களுக்கு சாதிக்கான தலைவன் வேண்டுமா, சாதிக்க துடிக்கும் தலைவன் வேண்டுமா? நாட்டை ஆள்பவன் இறைவனைப்போல் இருக்க வேண்டும். சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க தகுதி இல்லாதவர்கள் காசு கொடுத்து ஓட்டு வாங்குகிறார்கள். உரிமையை ஒருபோதும் இழக்கக் கூடாது.
காசு இல்லாததால் தொடர்ந்து நான் தோற்றுத் தோற்று நிற்கிறேன். என்றைக்கு என்னை உணர்கிறீர்களோ அன்றைக்கு என்னை வெல்ல வைத்தால் போதும். நான்கு முறை நான் போட்டியிட்டுள்ளேன். ஆனால் நான் தோற்கவில்லை. நீங்கள்தான் தோற்றுப்போனீர்கள். தோல்விக்கு பயந்து 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை. சாதி, மதத்தை சொல்லி நான் வாக்கு கேட்கவில்லை. தமிழன் என்ற இனத்தை சொல்லி வாக்கு கேட்கிறேன். நான் வாக்குக்கு காசு கொடுக்க மாட்டேன். ஆனால், ஆகச்சிறந்த வாழ்க்கையை தருவேன்.
அதிமுக ஆட்சியில் தந்தை, மகனை அடித்து கொன்றார்கள். இப்போது பனை ஏறும் தொழிலாளியை காலில் சுட்டுள்ளார்கள். நான் கள் இறக்குகிறேன். மீண்டும் தேதி குறித்து கள் இறக்குவேன். என்னை வந்து சுடுங்கள் பார்க்கலாம். நான் வென்று வருவேன். துப்பாக்கியால் சுட்டவர்களை அதே பனையில் கட்டி வைத்து, பச்சை மட்டையால் அடிப்பேன்.
தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடச் சொன்னது யார்? தந்தை, மகனை அடித்து கொன்றது யார்? பனை தொழிலாளியை சுடச் சொன்னது யார்?. இவர்களுக்கு மானங்கெட்டு ஓட்டு போடப் போகிறீர்களா?. கள்ளச்சாராயம் காய்ச்சியவனை சுடாதவர்கள், பதநீர் இறக்குகிறவனை சுடுகிறார்கள் என்றால் நோக்கம் என்ன? துப்பாக்கியால் சுட்டவரை டிஸ்மிஸ் செய்யாத இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்வோம்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கும், நடிகனை பார்க்கச் சென்று நெரிசலில் சிக்கி இறந்தவருக்கும் ரூ.10 லட்சம் கொடுத்தார்கள். 2 கால்களிலும் சுடப்பட்டவரின் குடும்பத்துக்கு என்ன கொடுத்தீர்கள்? அவரது குடும்பத்துக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மக்களிடம் கையேந்தியாவது அந்த குடும்பத்தை காப்பாற்றுவேன். நான் வென்று வருவேன். நான் டாஸ்மாக்கை மூடுவேன், பனை, தென்னை, ஈச்ச மர கள் இறக்குவதை திறந்து விடுவேன்.
தேர்தலில் உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள். இதுதான் உங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு. யார் நல்லாட்சி கொடுத்தது, யார் நல்லாட்சி கொடுக்கப் போகிறார் என இரண்டே பேருக்குத்தான் போட்டி. காமராஜர் நல்லாட்சி கொடுத்தார். அவரை விட சிறந்த ஆட்சியை நான் கொடுப்பேன். எனக்கு ஓட்டு போடுங்கள், போடாமல் போங்கள். ஆனால் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள்.
தியேட்டரில் விசில் அடித்து, தெருவிலும் விசில் அடித்து திரியாதீர்கள். ரோடுஷோ பார்த்து மயங்காதீர்கள். இதுவரை நீங்கள் என்னோடு நிற்கவில்லை. இனியாவது என்னோடு நில்லுங்கள்." எனப் பேசினார் சீமான். அதைத் தொடர்ந்து தென்காசி மற்றும் கடையநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications