இனிமே இங்க நான்தான்.. மாநிலங்களவை எம்பி.. கமல்ஹாசன் தம்பி.. வைப் மோடில் கூல் சுரேஷ்!
சென்னை: கமல்ஹாசன் - சிலம்பரசன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படத்தை காண வந்த காமெடி நடிகர் கூல் சுரேஷ், மாநிலங்களவை எம்பி.. கமல்ஹாசனின் தம்பி.. என்று கோஷம் போட்ட சம்பவம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இந்த படம் கர்நாடகா தவிர்த்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் வெளியாகி இருக்கிறது. தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு எழுந்தது.

கர்நாடகாவில் தடை
இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரிதான நிலையில், தக் லைஃப் திரைப்படத்தை வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது. இதனை எதிர்த்து கமல்ஹாசன் தரப்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
ஓசூரில் குவியும் கர்நாடகா ரசிகர்கள்
இருப்பினும் 35 ஆண்டுகளுக்கு பின் கமல் - மணி ரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால், ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப ட்ரெய்லரிலும் கதை குறித்த எந்த தகவலும் இல்லாததால், ரசிகர்கள் படத்தை முதல் நாளிலேயே பார்க்க ஆவலாக உள்ளனர். கர்நாடகாவில் படம் வெளியாகாத நிலையில், ஓசூரில் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
கூல் சுரேஷ் அட்ராசிட்டி
இந்த நிலையில் கமல் ரசிகர்கள் ஒருபக்கம் கொண்டாட, இன்னொரு பக்கம் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் சேட்டை கொடுத்துள்ளார். சென்னையில் உள்ள திரையரங்கில் தக் லைஃப் படம் பார்க்க வந்த கூல் சுரேஷ், தக் லைஃப் படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இனிமே இங்க நான்தான்.. கமல் சாரும், சிம்பு சாரும் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.. எப்போதும் உலகநாயகன் கமல்ஹாசன் தான்.
சிலம்பரசன் ரசிகர்கள் உற்சாகம்
கடைசி வரை சிலம்பரசனின் ரசிகனாக இருக்க விரும்புகிறேன்.. மாநிலங்களவை எம்பி.. கமல்ஹாசனின் தம்பி எஸ்டிஆர்.. அனைத்து ரசிகர்களுக்கும் சிம்பு சாரை பிடிக்கும் என்று கோஷம் எழுப்பினார். வழக்கமாக சிலம்பரசன் படம் வெளியாகும் படத்தன்று கூல் சுரேஷ் வேறு லெவலில் சேட்டையை கொடுப்பார். தற்போது மாநிலங்களவை எம்பி கமல்ஹாசனின் தம்பி என்று பேசி இருப்பது சிலம்பரசன் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications