சிம்பு நடித்த படத்தில் நடித்த நடிகர் வடிவேலுவின் தம்பி! ஜெகதீசன் உடலுக்கு வைகைப்புயல் கண்ணீர் அஞ்சலி
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் பார்ப்பதற்கு அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார். அவரும் ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம்.
வைகைப்புயல் வடிவேல்! இன்று இவருடைய டெம்ப்ளேட் இல்லாத மீம்ஸே இல்லை. அந்த அளவுக்கு அனைத்து சிசுவேஷன்களுக்கும் பக்காவாக பொருந்தக்கூடிய முகபாவனைகளை கொண்டவர் வடிவேலு.

வடிவேலுவின் தந்தை கண்ணாடி அறுக்கும் தொழிலை செய்து வந்தார். இந்த நிலையில் இவருடைய தந்தை திடீரென இறந்துவிடவே வடிவேலு தனது சகோதரர்களுடன் இணைந்து இதே தொழிலை செய்து வந்தார்.
மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமெடி கேரக்டர்களில் உள்ளூர் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி படத்தில் சிறிய கேரக்டர் நடித்திருந்தார். சென்னைக்கு ரயிலில் வரும் போது ராஜ்கிரணை வடிவேல் சந்தித்தார். அப்போதுதான் வடிவேலுவை என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்க சிபாரிசு செய்திருந்தார்.
1990களில் கவுண்டமணி- செந்தில்- வடிவேல் காம்பினேஷன் அட்டகாசமாக இருந்தது. இதையடுத்து வடிவேலுவை விஜயகாந்த் ஆதரித்து சின்ன கவுண்டர் படத்தில் காமெடி ரோல் கொடுத்தார். இப்படியாக வடிவேல் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த காமெடியனுக்காக 3 முறை தமிழக அரசு விருதுகளை வாங்கியுள்ளார்.
வடிவேலுவுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர், இரு தங்கைகள் உள்ளனர். வடிவேலு சினிமாவில் சம்பாதிக்கத் தொடங்கியதும் தன்னுடன் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை கரையேற்றினார். இதை வடிவேலுவின் தம்பியே ஒரு முறை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த அளவுக்கு குடும்பத்தினர் மீது பாசம் கொண்டவர் வடிவேல் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வடிவேலுவின் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸன் இறந்துள்ளார். இவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்திலும் நடித்திருந்தார்.
அந்த ஒரு படத்துடன் சினிமாவில் நடிப்பதை ஜெகதீசன் நிறுத்திக் கொண்டு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசன் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். ஜெகதீஸ்வரன் பார்ப்பதற்கு அப்படியே வடிவேலுவை போல் இருக்கிறார்.
இறந்த ஜெகதீசனுக்கு அமைச்சர் மூர்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். சில மாதங்களுக்கு முன்புதான் வடிவேலுவின் தாயார் மறைந்தார். இந்த நிலையில் தம்பியின் மரணம் வடிவேலுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications