கால் பண்ணி மிரட்டுவாங்க.. பொதுமக்களுக்கு அலர்ட் கொடுத்த காமெடி நடிகர் யோகிபாபு
சென்னை: சமீபகாலமாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதியோர், தொழில்முனைவோர் உள்ளிட்ட வங்கிக் கணக்கில் அதிகளவில் பணம் வைத்திருக்கும் நபர்களைக் குறிவைத்து அவர்களை மிரட்டி மோசடி கும்பல் ஒன்று பணம் பறித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் ஆன்லைன் திருட்டு, ஆஃப்லைன் திருட்டு, இரட்டிப்பு லாபம், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என பல ரூட்டுகளில் பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த மோசடி கும்பல்கள் குறித்து காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இவர்களது வலையில் பொதுமக்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

பணத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், சிலர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிடுகின்றனர். அடையாளம் தெரியாத செல்போன் அழைப்புகள், கிரெடிட் ஆப்களில் கடன் வாங்குவது, வங்கிக் கணக்கு விவரங்கள், தங்களது சுய விவரங்களை முன்பின் தெரியாதவர்களிடம் கூறுவது மூலம் இந்த மோசடி சம்பவங்களில் சிக்குகின்றனர். இந்நிலையில், முதியோர், தொழில்முனைவோர், வியாபாரிகள் உள்ளிட்ட அதிக அளவில் வங்கிக் கணக்குகளில் பணம் வைத்திருப்பவர்களை குறிவைத்து மோசடி கும்பல் களத்தில் இறங்கியுள்ளது.
அந்த வகையில், உங்களுடைய ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை அதிக அளவில் செய்யும் அல்லது பண இருப்பு வைத்திருப்பவர்களின் செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் அழைத்து பேசி மோசடியில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு பேசுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப புலித்தோல், போலி பாஸ்போர்ட்கள், போதைப் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள், சிம்கார்டுகள் உள்ளிட்ட கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் உங்கள் பெயரில் வந்துள்ளது என்று பேசுவார்கள்.
இல்லையெனில், தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தில் இருந்து பேசுகிறோம் என்று கூறி உங்களது செல்போன் எண்ணை பயன்படுத்தி பல்வேறு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் மூலமாக கோடிக்கணக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மும்பை சைபர் க்ரைம் போலீஸார் அல்லது சிபிஐ போலீஸார் உங்களிடம் விசாரணை செய்வார்கள் என்று கூறிவிட்டு கட் செய்துவிடுவார்கள். பின்னர், இணைப்பை மற்றொரு நபருக்கு ஃபார்வேர்டு செய்வார்கள்.
அதில் பேசும் நபர் காவல் துறை அதிகாரி போல பேசுவார். பின்னர், ஸ்கைப் போன்ற ஆப்களை பதிவிறக்கம் செய்யவைத்து அதன் மூலம் வீடியோ காலில் போலீஸ் போன்று சீருடை அணிந்து கொண்டு மிரட்டுவார்கள். உங்கள் பெயரில்தான் இந்த மோசடிகள் நடந்துள்ளன. கைது செய்ய வேண்டாம் என்றால் அவர்கள் சொல்வதுபோல் பணத்தை அனுப்புங்கள். அந்தப் பணத்தை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் உங்களுடைய வங்கிக் கணக்குக்கு பணத்தை திருப்பி அனுப்புவிடுவதாக பேசுவார்கள்
எந்த தவறும் செய்யவில்லை என்ற நிரூபிப்பதற்காகவோ அல்லது அவர்களுடைய மிரட்டலுக்கு பயந்தோ வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் அனுப்பிவிடுகின்றனர். பணத்தை அனுப்பியதும் எதிர் முனையில் பேசுபவரின் இணைப்பு துண்டிக்கப்படும். இச்சம்பவத்துக்குப் பிறகே நாம் ஏமாற்றப்பட்டது தெரியவரும். இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் தங்களுடைய பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். விழிப்புணர்வோடு இருக்குமாறு சென்னை சைபர் கிரைம் போலீஸார் தொடர்ந்து விழிப்புணர்வு எற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், காமெடி நடிகர் யோகி பாபு மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில் பேசும் யோகிபாபு, எல்லோருக்கும் வணக்கம். நான் உங்கள் காமெடி நடிகர் யோகிபாபு பேசுகிறேன். சமீபகாலமாக முதியோர் உள்ளிட்டோருக்கு சில அழைப்புகள் வருகின்றன. அதில் பேசும் நபர்கள் நாங்க கூரியரில் இருந்து பேசுகிறோம். மும்பையில் இருந்து சைனாவுக்கு உங்களுடைய பெயரில் சென்ற பார்சலில் 5 கிலோ தங்கம், போதைப் பொருள்கள், புலித் தோல் ஆகியவற்றை கைப்பற்றியிருக்கிறார்கள்.
அந்த பார்சலுக்கும், உங்களுக்கும் தொடர்புள்ளது. போனை கட் செய்தீர்கள் என்றால் உடனடியாக எங்களுடைய மும்பை போலீஸ் உங்களை கைது செய்து விடுவார்கள். எனவே, நாங்கள் சொல்வதை முழுவதுமாக கேளுங்கள். உங்களுடைய தகவல்களை எல்லாம் எங்களுக்கு அனுப்புங்கள். அந்த தகவலை அனுப்பிய பிறகு உடனடியாக வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்ப வேண்டும். உங்களுடைய பணம்தான் என்று உறுதி செய்த பின்னர் திருப்பி அனுப்பப்படும் என்று மிரட்டுவார்கள்.
பின்னர் வீடியோ காலில் அழைத்தும் மிரட்டுவார்கள். இதுபோன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்துவிட்டு அருகே உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அல்லது சைபர் க்ரைம் உதவி எண்ணான 1930-க்கு அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications