வாழ்க்கையையே நாசம் பண்ணிட்டாரு.. நகை, பணமும் போச்சு! காதல் சுகுமார் மீது பகீர் புகார் கூறிய நடிகை!
சென்னை: பிரபல காமெடி நடிகரான காதல் சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக தனிக் குடித்தனம் நடத்தியதோடு, நகை பணம் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக பிரபல நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக காமெடி நடிகராக வளம் வருபவர் நடிகர் வடிவேலு. அவரைப் போலவே பல நடிகர்கள் சினிமாவில் வரவேண்டும் என நினைத்தனர். மேலும் அவரது பாடி லாங்குவேஜ் உள்ளிட்டவற்றை படத்திலும் காப்பி அடித்து பயன்படுத்தி உள்ளனர்.

அப்படி ஒரு நடிகர் தான் காதல் சுகுமார். ஆரம்பத்தில் நடிகர் வடிவேலு போலவே காமெடி செய்த அவர் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டார். காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் காதல் படமே அவருக்கு அடையாளத்தை கொடுத்தது.
காதல் சுகுமார்:
அதன் காரணமாகவே அவர் காதல் சுகுமார் என அழைக்கப்படுகிறார். தமிழ் திரை உலகில் 50க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ள அவர் திருட்டு விசில், சும்மாவே ஆடுவோம் என இரண்டு திரைப் படங்களை இயக்கியும் இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் ஓரிரு படங்களை சிறிய பட்ஜெட்டில் தயாரித்து இயக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் யூட்யூப் சேனல்கள் உள்ளிட்டவற்றிலும் பேட்டி அளித்து வருகிறார்.
நடிகை புகார்:
இந்த நிலையில் தான் தன்னை காதல் சுகுமார் திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம், நகைகள் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக நடிகை ஒருவர் பரபரப்பு புகாரை கூறி அதிர வைத்திருக்கிறார். சென்னையைச் சேர்ந்த அவர் ஒரு சில படங்களை துணை நடிகையாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்த நிலையில் குழந்தையுடன் வசித்து வரும் அந்த நடிகைக்கும் காதல் சுகமாருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பண மோசடி:
அவரை காதலிப்பதாக கூறிய காதல் சுகுமார் அந்த நடிகையை தனியாக குடி வைத்திருக்கிறார். மேலும் அவருடன் தனிக் குடித்தனம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அடிக்கடி அந்த நடிகையிடம் இருந்து நகை பணம் உள்ளிட்டவற்றையும் சுகுமார் வாங்கி வந்திருக்கிறார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக அந்த நடிகையுடன் சுகுமார் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அவர் செல்போன் நம்பரையும் பிளாக் செய்து இருக்கிறார்.
போலீசில் புகார்:
இதை அடுத்து தன்னை திருமணம் செய்து கொள்வதாக பணம் நகை உள்ளிட்டவற்றை வாங்கிவிட்டு தன்னிடம் பேசாதது ஏன் என நடிகை கேட்டதற்கு தனக்கு திருமணம் ஆகிவிட்டது என சுகுமார் கூறியிருக்கிறார். அப்போது தான் சுகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதும், அந்த பெண்ணுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தன்னுடன் பொய்யாக பழகியதோடு நகை பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்து விட்டதாக சுகுமார் மீது அந்த நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்டுள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications