பாஜகவை விமர்சிப்பது ஏன்?.. எம்.பி தம்பிதுரை விளக்கம்!
பாஜகவை பற்றி விமர்சிப்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை: பாஜகவை பற்றி விமர்சிப்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை எம்.பி. தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிமுக எம்.பியும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை பாஜகவை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். பாஜக அதிமுகவை அடிமை போல நடத்துகிறது என்று கூறினார். இதற்கு பாஜகவினரும் பதில் அளித்து வந்தனர்.

இதனால் பாஜக அதிமுக நட்பில் சிறிய விரிசலும் ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜகவை விமர்சிப்பது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் கூறி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஜெயக்குமாரின் கருத்துக்கு தற்போது தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.
அதில், பாஜகவின் கொள்கைகளுடன் முரண்படும் நேரத்தில் நான் அந்தக்கட்சியை விமர்சிக்கிறேன். பாஜக அதிமுகவின் எம்எல்ஏக்களை, தலைவர்களை நடத்தும் விதம் சரியில்லை. பாஜக உடன் இன்னும் கூட்டணி குறித்து பேசவில்லை.
பாரதீய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது என்று யார் சொன்னது?. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தேவைப்பட்டால் மெகா கூட்டணி அமைக்கப்படும். அதுகுறித்து இப்போது முடிவு செய்யமுடியாது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எந்த வழியை வகுத்தாரோ, அந்த வழியில் நாங்கள் சென்று கொண்டு இருக்கிறோம். தேர்தலின் போது கூட்டணி குறித்து பேசி முடிவெடுப்போம். இன்னும் தேர்தல் தேதியை அறிவிக்கப்படவில்லையே.
பாஜகவை நான் விமர்சிப்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாக எடுத்துக்கொள்ள கூடாது. என்னுடைய கருத்தை நான் கூறுகிறேன் என்று தம்பிதுரை கூறியுள்ளார்.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications