LPG cylinder: ஜூன் பிறந்தது! வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு! சென்னையில் ரேட் என்ன?
சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையில் ரூ 25 குறைந்து தற்போது 19 கிலோ சிலிண்டர் ரூ 1,881 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கும் வணிக பயன்பாட்டுக்கும் கேஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்த வருகின்றன.
பெட்ரோல் டீசல் விலை தினமும் மாறுவதை போல் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் மாறுகிறது. அந்த வகையில் இந்த மாதம் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ 25 குறைந்து ரூ 1,881 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சிலிண்டர் ரூ 868.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக சிலிண்டரின் விலை ரூ 41 குறைந்தது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ 1,91.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே சமயம் கடந்த ஓராண்டாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை.
இந்த நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி மத்திய அரசு ரூ 50 உயர்த்தியது. இதனால் ரூ 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ 868.50-க்கு விற்கப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம் சிலிண்டர் விலை உயரவில்லை. இந்த மாதம் வணிக சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்துள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கடந்த 2024 ஆம் ஆண்டு வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 100 குறைக்கப்பட்டது. இதனால் ரூ 918.50-லிருந்து ரூ 818.50 ஆக விற்பனை செய்யப்பட்டது. இந்த விலையில் ரூ 50 உயர்த்தப்பட்டதால் ரூ 868.50க்கு வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications
