கேஸ் சிலிண்டரில் வந்தது மாற்றம்.. இன்று வணிக சிலிண்டரின் விலையை பாருங்க.. குஷியில் குதிக்கும் சென்னை
சென்னை: இந்த நவம்பர் மாதத்தில், சமையல் சிலிண்டரின் விலை, பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இன்றைய தினம் வணிக சிலிண்டரின் விலையில் மட்டும் ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையிலே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

பெட்ரோல் டீசல்: இதில், பெட்ரோல், டீசல் விலைமட்டும் தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.. கேஸ் விலையோ, மாதத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
அதனால்தான், சிலிண்டர் விலை குறித்த அறிக்கைகளை, பொதுமக்களும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதிலும், இஸ்ரேல் விவகாரம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், சிலிண்டரின் விலையும் உயர்த்தப்படுவதால், பொதுமக்கள் நொந்துபோய் உள்ளனர்.
எரிவாயு சிலிண்டர்: கடந்த செப்டம்பரில், 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 203 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.. எனவே, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.918.50 விற்பனை செய்யப்பட்டு வந்தது. செப்டம்பரில் கேஸ் விலை குறையாததால், நவம்பர் 1ம் தேதி, கேஸ் விலை குறையும் என்று பொதுமக்கள் நம்பினார்கள்..
ஆனால், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையானது, ரூ. 101.50 உயர்ந்த நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை.. இதன்காரணமாக, செப்டம்பரில் நிலவிய, அதே 918.50 ரூபாய்தான், நவம்பரிலும் தொடர்ந்தது.
வணிக பயன்பாடு: அந்த வகையில் நவம்பர் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று சிலிண்டருக்கு 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. அதே 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும் என்றாலும், வணிக சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது ஓரளவு நிம்மதியை தந்து வருகிறது.
கனத்த நம்பிக்கை: இதனிடையே, சமையல் சிலிண்டருக்கான மானியம் விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.. அடுத்த சில மாதங்களில், பொதுத்தேர்தல் நடக்கப்போவதால், கேஸ் சிலிண்டருக்கான மானியம், மறுபடியும் உயர வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications