LPG: விடிந்ததும் இப்படியா? வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு! அப்போ வீட்டு உபயோக எல்பிஜி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை இன்று முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல் கடை வைத்திருப்போர், சிறிய உணவு கடை நடத்தி வருவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் மாற்றமின்றி விற்பனையாகிறது.

19 கிலோ சிலிண்டர் விலை ரூ 66.50 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ 2984 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

lpg commercial cylinder

வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 கிலோ எடை கொண்டது ரூ 957.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ 66.50 உயர்ந்து ரூ 2983 -க்கு விற்பனையாகிறது.

தலைநகர் டெல்லியில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ 62.50 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் ரூ 2810 க்கு விற்பனையாகிறது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ரூ 9.50 விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் சற்று விலை குறைந்தது, கடந்த இரு மாதங்களாக சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது.

இந்த மாதம் நவராத்திரி ஆரம்பிக்க போகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. பண்டிகை காலங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிகள் உள்ளிட்ட இடங்களில் வர்த்தக சிலிண்டர் பயன்பாடு அதிகரிக்கும் காலம். பலகாரங்கள் ஆர்டர் கொடுப்பார்கள். சிலிண்டர் விலை உயர்வால் பலகாரங்களின் விலைகளும், உணவு பொருட்களின் விலைகளும் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. மேலும் டீ, காபி ஆகியவற்றின் விலையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு சாலையோர ஹோட்டல் கடைகளையும் பாதித்துள்ளது. குறைந்த விலையில் உணவு கொடுத்து வருவதால் ஏழை எளிய மக்கள் உணவு சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்த சிலிண்டர் விலை உயர்வால் அவர்களும் உணவு விலையை ஏற்றும் அபாயம் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+