வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.101 அதிகரிப்பு- இன்று முதல் ரூ.1999.. ஹோட்டல் பக்கம் போக முடியாது?
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ101 அதிகரித்து ரூ1999 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளில் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதம் 1-ந் தேதியன்று வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதாவது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 203 உயர்த்தப்பட்டது. அதுவரை ரூ. 1695-க்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் ரூ. 1898 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இன்று முதல் இந்த சிலிண்டர் விலை ரூ. 101 உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் வணிக பயன்பாட்டு விலை சிலிண்டர் விலை இன்று முதல் ரூ. 1,999 ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பரில் ரூ. 1695 ஆக இந்த சிலிண்டர் தற்போது ரூ. 2,000 ஆக உயர்ந்துள்ளது. ஒரே மாததரூ. 300 விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. டெல்லியில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை தற்போது ரூ. 1833க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வால் ஹோட்டல், தேநீர் கடைகளிலும் உணவுப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயரக் கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. ஹோட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்டவை விலைகள் கணிசமாக உயர்த்தப்படக் கூடும். தேநீர் கடைகளில் டீ, காபி விலை இனி ரூ. 15 முதல் ரூ. 20 ஆக உயரவும் வாய்ப்பிருக்கிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலைகளில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.












Click it and Unblock the Notifications