சூப்பர்.. வணிக வரித்துறையின் "ஆக்ஷன்:.. வருமான வரியை கட்ட சொல்றது இதுக்குதான்.. திணறிய சவுகார்பேட்டை
சென்னை: வரி செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகளை ஏலம் விட்டு, அதன்மூலம் 3.90 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக, வணிக வரித்துறை அறிவித்துள்ளது.
வருமானவரியை தவறாமல் அனைவரும் செலுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது..அப்படியிருந்தும்கூட, வரிஏய்ப்பு நடந்து கொண்டுதானிருக்கிறது.. குறிப்பாக, மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது.

வரி ஏய்ப்பு: அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித் துறை புதிய சாப்ட்வேரை சமீபத்தில் மத்திய அறிமுகப்படுத்தியது..
இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரிஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இதனிடையே, வருமான வரி முதன்மை தலைமை ஆணையரும், தலைமை இயக்குநருமான (புலனாய்வு)சுனில் மாத்தூர், கடந்த வாரம் ஒருவிழாவில் பேசும்போது, "வரும் 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் மொத்த வரி வருவாய் இலக்கு ரூ.33.60 லட்சம் கோடியாகவும், இதில் நேரடி வரி வசூல் ரூ.18.30 லட்சம் கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வரி ஏய்ப்புக்கு எதிரான தடுப்புநடவடிக்கைகளையும் வருமான வரித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வரிஏய்ப்பு: வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நேர்மையாக வரி செலுத்துவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் புலனாய்வு பிரிவு 2022-23-ம் நிதி ஆண்டில் 81 சோதனைகளும், பறிமுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் ரூ.120 கோடி ரொக்கம், ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் என மொத்தம் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக, கணக்கில் காட்டப்படாத ரூ.5,200 கோடி வருமானமும் கண்டறியப்பட்டது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வரிஏய்ப்பு நடவடிக்கைகளில் வணிகவரித்துறையும் அதிரடி காட்டி வருகிறது.. அதாவது, வரி செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகளை ஏலம் விட்டு, அதன்மூலம் 3.90 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக, வணிக வரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வணிக வரி ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதுதான்:

வரி ஏய்ப்புகள்: "சென்னை வடக்கு கோட்டத்தில், 'மோனிகா மெட்டல்ஸ்' என்ற நிறுவனத்தில், 2012ல் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, போலி ரசீதுகள் வாயிலாக, அதிக உள்ளீட்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. பத்து ஆண்டுகளாக வரி பாக்கியை செலுத்தாததால், சவுகார்பேட்டையில் உள்ள நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஏல நடவடிக்கையை தொடரவும் உத்தரவிட்டது.பிறகு, ஜூலை 21ல் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. இதன் வாயிலாக, அரசுக்கு வர வேண்டிய, 3.90 கோடி ரூபாய் வரி பாக்கி வசூல் செய்யப்பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications