“கும்பலாக வந்து மிரட்டுறாங்க..” அத்துமீறும் மாடு வளர்ப்போர்! அதிரடி வார்னிங் ஆணையர் ராதாகிருஷ்ணன்
சென்னை: மாடுகளை தெருவில் சுற்றவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ள நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் இவ்வாறு சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதில் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாடுகளை பிடிக்க சென்றால் கும்பலாக வந்து மிரட்டுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் மனிதர்கள் நடந்து செல்லவே போதுமான இடம் இல்லாதபோது, மாடுகள் மட்டும் ஜாலியாக சுற்றி வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், தேவையற்ற விபத்து, மாடு முட்டுவதால் காயம் ஏற்படுதல் உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்த சிறுமியை தெருவில் சுற்றிக்கொண்டிருந்த மாடு ஒன்று சரமாரியாக தாக்கியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தெருவில் சுற்றும் மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

அதேபோல மாட்டை இவ்வாறு அலட்சியமாக விடும் அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்திருந்தது. இருப்பினும் இந்த மாடுகளின் தொல்லை ஓய்ந்தபாடில்லை. கடந்த 18ம் தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெருவில் நடந்து சென்ற சுந்தரம் என்ற 80 வயது முதியவரை மாடு முட்டியது. இதில் சுந்தரம் படுகாயமடைந்தார். இந்த இரண்டு சம்பவங்களையடுத்து, தெருவில் மாடு திரிந்தால் அதை கட்டாயம் பிடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இவ்வாறு பிடிக்கப்படும் மாடுகளுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார். இந்நிலையில் ரோட்டில் சுற்றும் மாட்டை பிடிக்க செல்லும்போது கும்பலாக வந்து மிரட்டுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "தெருவில் திரியும் மாடுகளை பிடிக்கச் செல்லும்போது நாங்கள் மாட்டின் உரிமையாளர்களை தொந்தரவு செய்வதாக அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஏற்கனவே அரும்பாக்கத்தில் ஒரு சிறுமியும் தற்போது 80 வயது முதியவர் ஒருவரும் மாடு முட்டியதால் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே தயவு செய்து மாடுகளை தெருவில் திரிய விடாதீர்கள். மாட்டை கயிறு கொண்டு கட்டி இருந்தால் அதை பிடிப்பதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது எனவே மாட்டை கட்டிப்போட்டு வையுங்கள்.
இதில் சில தில்லுமுல்லுகளும் நடக்கின்றன. அதாவது கால்நடை பிடிக்கும் வாகனங்கள் வரும்போது மட்டும் அந்த மாட்டை கட்டி வைக்கின்றனர். அந்த வாகனம் சென்ற பின்னர் அதை அவிழ்த்து விட்டு விடுகின்றனர். இது தொடர்பாக நாங்கள் காலையில் ரெய்டுக்கு சென்றபோது வெட்டுவேன் என மாட்டின் உரிமையாளர்கள் கும்பலாக மிரட்டுகிறார்கள். மாடு மூலம் யாருக்கேனும் காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரச்சனை உருவானால் தகுந்த சட்டப்பிரிவின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல இதுபோன்ற மிரட்டினாலும், மாநகராட்சி ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பதாக வழக்குப்பதிவு செய்யயப்படும்.
இவ்வாறு சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க கால்நடை ஊழியர்கள், கால்நடை மருத்துவர்கள் என பல்வேறு குழுக்கள் சென்னை முழுவதும் ரெய்டு மேற்கொண்டு வருகிறது. எனவே மாடு வளர்ப்போர் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல மாட்டை கட்டிப்போட தங்களுக்கு வேறு இடம் வேண்டும் என்று உரிமையாளர்கள் கூறுகிறார்கள் அப்படி இடம் வழங்குவதற்கு எங்களுக்கு அதிகாரம் கிடையாது. ஏற்கனவே கொடுங்கையூரில் மாடு கட்டுவதற்கான ஒரு இடத்தை காட்டினோம். அங்கு 250 மாடுகள் கட்டி வைக்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் இந்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்கள் கூடுதலாக மாடுகளை வாங்கி விட்டனர். இப்படியே நாம் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்க முடியாது.
நாங்கள் சமீபத்தில் சில மாடுகளை பிடித்தோம். அந்த மாட்டுக்கு உடல் முழுக்க காயங்கள் இருந்தன. மாட்டை சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பதும் குற்றமாகும். மாநகராட்சிக்கு மாடு வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை பாதிக்க வேண்டும் என்கிற எந்த நோக்கமும் கிடையாது. எனவே மாடு வளர்ப்பில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்" என்று கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications