சமூக நீதியை கண்காணிக்க குழு அமைப்பு... யாரெல்லாம் இதில் இடம்பெறுகிறார்கள் தெரியுமா..?
சென்னை: சமூகநீதியை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுவும் சமூகநீதிக்கான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் நூற்றாண்டு காணும் தருணத்தில் இத்தகைய சிறப்பு குழுவை அவர் நியமனம் செய்யவிருக்கிறார்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்டவைகளில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் அண்மைக்காலமாக சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றுவதில்லை எனவும் சமூக நீதி தேய்பிறையாகி வருவதாகவும் புகார்கள் எழும் நிலையில், சமூக நீதியை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் குறிப்பாக சமூகநீதியை காக்க போராடியவர்கள் வரவேற்றுள்ளனர். கண்காணிப்பு குழு மூலம் தமிழகத்தில் சமூக நீதி நிலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையை மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.
இந்தக் குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், உள்ளிட்டோர் இடம் பெறவுள்ளார்கள். சமூக செயற்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடும் சீரிய பட்டறிவும் கொண்டவர்கள் இந்தப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படவுள்ளார்கள். இவர்கள் மூலம் சமூகநீதியின் அளவுகோலானது சட்டப்படி இருக்கிறதா, முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும்.
சமூகநீதி உரிய முறையில் பின்பற்றபடாவிட்டால் அது குறித்த தகவலை இந்தக் குழு அரசுக்கு அளித்து நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யும். இதனிடையே சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், நீதிக்கட்சி ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட வகுப்பு வாரி இட ஒதுக்கீடு ஆணை 1921லிருந்து தான் சமூக நீதி வரலாறு தொடங்குகிறது எனக் கூறியிருக்கிறார்.
மேலும், அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையின் அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இத்தகைய சமூக நீதி புரட்சிக்கு வித்திட்ட பி.டி.ராஜன், தியாகராயர், நடேசன் முதலியார்,பனகல் அரசர் போன்ற முன்னேடிகளை நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம் எனக் கூறியிருக்கிறார்.
இந்நன்னாளில் சமூக நீதி கண்காணிப்பு குழு அமைப்பதில் தாம் பெருமை அடைவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications