"அந்த" பயம் இருக்கட்டும்.. ஸ்டாலினின் "ஜனசக்தி.. அண்ணாமலைக்கு வாய்தான்..எகிறி அடிக்கும் காம்ரேடுகள்
பாஜக அண்ணாமலையை விமர்சித்து முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மோதலையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் மலிவான அரசியலில் ஈடுபடுவதை பாஜக தலைவர் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் சற்று காட்டமாகவே எச்சரித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே, திமுகவை குறி வைத்து அட்டாக் செய்து வருகிறார்.. இந்த அட்டாக் விஷயத்தில், அதிமுகவையே ஓவர்டேக் செய்து முந்தி கொண்டு போய் கொண்டிருக்கிறது.
ஆனால், திமுகவோ அண்ணாமலையை பெரிதாக கண்டுகொள்வதில்லை.. அதேசமயம் திமுவின் கூட்டணி கட்சிகள் அண்ணாமலையின் அரசியலை விமர்சிக்காமல் இருந்ததில்லை.. இதில் முதல் நபராக திருமாவளவனை சொல்லலாம்.

அருவெறுக்கத்தக்கது
இதற்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சிகளை சொல்லலாம்.. "அண்ணாமலை பொதுவெளியில் பேசிவருவது அருவருப்பான பேச்சு. அநாகரிகமான அரசியல்... மலிவு அரசியல்.. அண்ணாமலையின் அநாகரிக அரசியல் அருவருக்கத்தக்கது.. அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர்" இப்படியெல்லாம் தமிழக பாஜக தலைவரை விமர்சித்து வருபவர்கள் இந்திய கம்யூன்ஸ்ட் கட்சியின் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் போன்றோர் ஆவர்.

முத்தரசன்
அந்த வகையில், இப்போதும் முத்தரசன் ஒரு அறிக்கை விட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் அண்ணாமலைக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.. இதுதான் அந்த அறிக்கை: "தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள, நீட் தேர்வுக்கு விதிவிலக்குக் கோரும் மசோதா உட்பட பல மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இதனால் பாதிக்கப்படும் பகுதியினர் ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக வழி முறையில் போராடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை
இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆளுநர் திருவாவடுதுறை மடத்திற்கு செல்லும் வழியில் மயிலாடுதுறையில் சில அமைப்பினர் அமைதியாக ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் பயண வழியில் எந்தவொரு சிறு இடையூறும் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆளுநர் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்பதை முதலமைச்சர் சட்டப் பேரவையில், விரிவாக விளக்கி தெளிவுபடுத்தியுள்ளார்.

சனாதன கொள்கை
ஆனால், பாஜகவின் தமிழ்நாடு தலைவர் திரு.கே.அண்ணாமலை ஏதோ பெரிய விபரீதம் ஏற்பட்டுவிட்டது போல் கூக்குரல் எழுப்பி வருகிறார். அவரது ஆதரவாளர்கள் செயற்கையான பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரிடம் நேரில் புகார் கொடுத்து, என்ன செய்கிறோம் பார்! என மிரட்டி வருகிறார். பாஜகவின் மதவாத, சனாதானாக் கொள்கைக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை அணி திரட்டும் பணியில் திமுகழகத் தலைவர், முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் முனைப்புடன் செயலாற்றி வருவதால், நாடு முழுவதும் ஜனநாயக சக்திகள் எழுச்சி கொண்டு வருவதால் பாஜகவினர் அஞ்சி நடுங்கி வருகின்றனர்.

மலிவு அரசியல்
அவர்களது அச்சத்தை மறைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசை மிரட்டும் வாய்ச்சவடால் அரசியலில் திரு.கே. அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். முன்னாள் காவல்துறை அலுவலர் சட்டம் அறிந்து செயல்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் மோதலையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் மலிவான அரசியலில் ஈடுபடுவதை பாஜக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எச்சரிக்கிறது. திரு.கே.அண்ணாமலையின் சட்ட அத்துமீறலை கண்டித்து ஜனநாயக சக்திகள் களம் இறங்கி போராடும்' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி!












Click it and Unblock the Notifications