"சிங்கிள்" சீட் தானாமே.. அள்ளி தரும் என பார்த்தால், திமுக கிள்ளி தந்துடும் போலயே.. கலக்கத்தில் கட்சி
திமுகவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு சீட் ஒதுக்கீடு இழுபறியாக உள்ளது
சென்னை: அள்ளி கொடுப்பாங்க என்று பார்த்தால், திமுக கிள்ளி தந்துடும் போலயே என்று கம்யூனிஸ்ட்கள் கவலையில் உள்ளதாக தெரிகிறது.. இன்னும் திமுக கூட்டணி முடிவாகாத சூழலில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை சீட்களை திமுக ஒதுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
திமுக தலைமை இந்த முறை பெரும் வியூகம் அமைத்து காய் நகர்த்தி வருகிறது.. காங்கிரஸ் கட்சி பெரும் அதிருப்தியில் உள்ளது.. வாய் விட்டு பலமுறை கேட்டும், எதிர்பார்த்த சீட் ஒதுக்கீடு கிடைக்காது என்ற நிலை உள்ளது.
மதிமுக, விசிக அதற்கு மேல் கையை பிசைந்து கொண்டிருக்கின்றன.. தனித்தன்மை, தனிச்சின்னம், என்ற பிரச்சனையில் இருப்பதால், கூட்டணி முடிவாக முடியாமல் உள்ளது.

விருப்பம்
இந்த கட்சிகளை போலவேதான், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சீட் கேட்டு வந்தன.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாங்கள் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளுக்கான லிஸ்ட்டை ஏற்கனவே திமுக தலைமையிடம் தந்திருந்தனர்.. அதன் அடிப்படையில் எவ வேலுவும், அக்கட்சி மாநில நிர்வாகிகளோடு பேச்சு நடத்தியதாக சொல்லப்பட்டது.. அப்போதே 3 சீட் என்றுதான் பேச்சு ஆரம்பமாகி உள்ளது..

டி.ராஜா
ஆனால், சிபிஎம் அதற்கு மறுப்பு சொல்லிவிட்டது. இரட்டை இலக்கத்திலேயே இரு கம்யூனிஸ்ட்டுகளும் விடாப்பிடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. ஆனால், ஒற்றை இலக்கத்தில்தான் திமுக முடிவாக இருக்கிறதாம்.. இந்நிலையில், தங்கள் கட்சியின் பலம், எதார்த்தத்தை உணர்ந்து திமுக கூட்டணியில் தொகுதிகளை கேட் பெறுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவும் உறுதியாக தெரிவித்துள்ளார்.

மாநாடு
அதுமட்டுமல்ல, இப்படி ஒரு நெருக்கடியான சூழலில் மதுரையில் நாளைக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடக்க போகிறது.. தேர்தலுக்காக தான், இந்த மாநாடு நடத்தறோம் என்று அக்கட்சியின் செயலாளர் முத்தரசன் ஏற்கனவே ஓபனாக சொல்லி இருந்தார்..

ஸ்டாலின்
இந்த மாநாட்டை நடத்தி, அதன்மூலம் தங்கள் பலத்தை காட்டினால்தான், ஒற்றை இலக்கில் இருந்து டபுள் டிஜிட் சீட் கிடைக்கும் என்று கணக்கு போடப்படுகிறது... அதுமட்டுமல்ல, இந்த மாநாட்டில் ஸ்பெஷல் உரையாற்ற போவது திமுக தலைவர்தான்.. அதனால், எப்படியும் கட்சிக்கு கூடும் கூட்டத்தை பார்த்துவிட்டு, எதிர்பார்த்த நம்பர் தானாகவே கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..!
-
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications