Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கம்யூனிஸ்ட்கள் தனியா நிக்க வேண்டியதுதானே? கதர் கட்சி குரலில் மாற்றம்: திருமாவளவனிடம் அஞ்சும் திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் திமுகவிடம் கோபித்து கொண்டு செல்வதற்கு அன்று போக்கிடம் இல்லாத நிலையில், இன்று விஜய் இருக்கிறார்.. "நாங்கள் ஒன்றும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்லவில்லை, ஆனால் எங்களுக்கு ஆஃபர்கள் இருக்கின்றன" என்ற டிமாண்டையே இந்த கட்சிகள் திமுக முன்பு வைக்கின்றன என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன் திருமாவளவனின் தெளிந்த அரசியல் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

social Talkies என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, "கூடுதல் சீட்களை திமுகவிடம் கேட்போம் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.. ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு? என்றும் காங்கிரஸ் கட்சி சொல்லி வருகிறது.

Communist DMK Thirumavalavan

இந்த மிரட்டல் குரல், தேர்தல் வரை ஒலிக்கக்கூடியதாகவும், டிமாண்டை அதிகரிக்கக் கூடியதாகவும் இருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க ஏன் எங்களை கூப்பிடவில்லை? என்று இப்போதே செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்.. இது தேர்தல் காலம் என்பதால், எல்லாவற்றிலும் பங்கு கேட்பதும், முரண்டு பிடிப்பதும் ஆரம்பமாகியிருக்கிறது.

கூட்டணி பலத்தால்தான் திமுக வென்றிருக்கிறது.. கூட்டணி இல்லையென்றால், எங்களைவிட அவர்களுக்குதான் இழப்பு அதிகம்,. அதனால் என்ன செய்ய வேண்டும் என்பது திமுகவுக்கு தெரியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சண்முகம், பட்டவர்த்தனமாக சொல்லி உள்ளார்..

கம்யூனிஸ்ட் தனியா நிற்க வேண்டியதுதானே

அதாவது எங்களை நம்பிதான் திமுகவே உள்ளது என்பதை வெளிப்படையாகவே சொல்லி உள்ளார்.. இது சினிமாவில் வருவது போன்ற மிரட்டலாகும்.

திமுக, அதிமுக, விஜய் இவர்களில் யாருமே 2 கம்யூனிஸ்ட் கட்சிகளையும், தங்களது கூட்டணியில் சேர்த்து கொள்ளாவிட்டால், ஒரு எம்எல்ஏ சீட்கூட பெற முடியாது. கடந்த முறையே கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 சீட்களை தந்தாகிவிட்டது. இப்போது கூடுதலாக கேட்போம் என்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிதான் பெரிய கட்சி என்கிறார்களே? எதுக்கு திமுக கிட்ட 5 சீட், 6 சீட் வாங்கிட்டு இருக்கணும்? பேசாமல் 234 தொகுதிகளிலுமே கம்யூனிஸ்ட்கள் தனித்து போட்டியிடலாமே? வரும் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே ஒன்றுசேர்ந்து போட்டியிட்டு, ஒரு எம்எல்ஏ சீட்டையாவது வெற்றி பெற்று காட்டட்டுமே?

தீண்டத்தகாத கட்சி பாஜக

இப்படி குட்டி குட்டி கட்சிகள் எல்லாம் மிரட்டல் போக்கை கையில் எடுக்க காரணம், திமுக அரசு பலவீனமாகிவிட்டது.. இதுபோல ஜெயலலிதா, மோடி அரசுகளை மிரட்ட முடியுமா?

இதற்கு முன்பு, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் எல்லாம் திமுகவிடம் கோபித்து கொண்டு , அதிமுகவுக்கு செல்வார்கள்.. இப்போது அதிமுகவுக்கும் போக முடியாது. ஏனென்றால் அங்கே பாஜக கூட்டணியில் உள்ளதே? பாஜகதான் இவர்களுக்கு தீண்டத்தகாத கட்சியாகிவிட்டதே?

திருமாவளவன் 2001-ல் திமுக-பாஜக கூட்டணியில்தான் எம்எல்ஏ ஆனார்.,. அப்போது பாஜக கூட்டணியில் எம்எல்ஏ ஆகிவிட்டு, இப்போது பாஜகவை தீண்டத்தகாத கட்சி என்கிறார்..

கூட்டணி கட்சிகள் டிமாண்டு

கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் திமுகவிடம் கோபித்து கொண்டு செல்வதற்கு அன்று போக்கிடம் இல்லாத நிலையில், இன்று விஜய் இருக்கிறார்..

"நாங்கள் ஒன்றும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்லவில்லை, ஆனால் எங்களுக்கு ஆஃபர்கள் இருக்கின்றன" என்ற டிமாண்டையே இந்த கட்சிகள் திமுக முன்பு வைக்கின்றன. ..

"திமுக ஆட்சி தமிழகத்தின் பொற்காலம்" என்று சொல்லி கொண்டிருந்தவர்கள், விஜய் இன்று தனி அரசியல் கட்சியாக உருவெடுத்ததுமே, அவர்களிடம் ஒரு மாற்றம் வந்துள்ளது..

அவ்வளவு ஏன்? காலம் முழுக்க திமுகவிடம் சண்டை போட்டு கொண்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தான் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு, "தமிழகத்தில் நடப்பதே காமராஜர் ஆட்சிதான்" என்று ஒரே போடாக போட்டார்.. காரணம் அப்போது விஜய் இல்லை.

திருமாவளவன் அரசியல்

விசிக திருமாவளவன் அன்றே மூப்பனாரிடம் பாடம் பயின்றவர்.. கலைஞர், அம்மா, இருவரிடமும் அரசியல் பயின்றவர்.. இவர்கள் இருவரிடமும் கூட்டணி வைத்தவர். எனவே அவருக்கு நிறைய அரசியல் நெளிவு சுளிவுகள் தெரியும்.. தனக்கு என்ன தேவை? தன்னுடைய கட்சிக்கு என்ன தேவை? இலக்கு என்ன? போன்ற அனைத்து விஷயங்கள் பற்றின பார்வையும் திருமாவளவனிடம் தெளிவாக உண்டு.

இன்று விசிகவுக்கு 8 சதவீத ஓட்டு, 2 எம்பி, 4 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அடுத்த முறை 4 எம்பி, 10 எம்எல்ஏக்களை பெறவே முயற்சிப்பார்.. அதனால் நிதானமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

சரியான காய்நகர்த்தல்

எனவேதான், திமுகவுக்கு மற்றவர்களை திருமாவளவனை கண்டால்தான் அச்சம்.. எப்போதுமே எதிரணிக்கு போவதாக திருமாவளவன் சொல்லவே மாட்டார்..

உதாரணத்துக்கு இப்போது கரூர் விவகாரத்தில்கூட, "விஜய் மீது ஏன் எப்ஐஆர் பதியவில்லை? தமிழ்நாடு போலீசுக்கும், தவெகவுக்கும் ஏதாவது ரகசிய உறவு இருக்கா?:" என்று கேட்டவர், பிறகு திடீரென விஜய்யை கைது செய்ய நான் சொல்லவே இல்லையே என்றார்..

அதாவது தெளிவான காய்நகர்த்தலை திருமாவளவன் மிகச்சரியாக செய்து வருகிறார்" என்றெல்லாம் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+