கூட்டணிக்கு நோ.. ரெட் கார்டு காட்டிய கம்யூனிஸ்ட்டுகள்! உச்சகட்ட டென்ஷனில் விஜய்!
சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை கூட்டணியுடன் எதிர்கொள்ள விஜய் திட்டமிட்டிருக்கிறார். எனவே, கூட்டணி கட்சி தலைவர்களை தவெக அமைச்சர்கள் சந்தித்திருக்கின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் விஜய் உடனான கூட்டணிக்கு நோ சொல்ல இடதுசாரிகள் திட்டமிட்டிருக்கின்றனர். இதனால் விஜய் டென்ஷனாகியிருக்கிறார்.
தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் தவெகவுக்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கொடுத்திருந்தன. இருப்பினும் விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் போல.. அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என்றும், வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்போம் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியிருந்தன. எப்படியோ ஒன்னு.. ஆதரவு கொடுத்தால் போதும் என்று தவெக எதிர்பார்த்திருந்தது.

ஆனால், பிரச்சனையே அடுத்தடுத்துதான் வெடித்தது. நீட் போராட்டத்தில் இடதுசாரி மாணவர் அமைப்பை சேர்ந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டது, கம்யூனிஸ்ட்டுகள் குறித்து சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டது, இடதுசாரி மாணவர்களை கண்காணிக்க உத்தரவிட்டது, தூய்மை பணியாளர்களின் போராட்டம் என.. விஜய் ஆட்சியில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்தன. ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன இடதுசாரிகள்.. நாங்கள் வேண்டுமா? அதிகாரிகள் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பின.
இந்த பஞ்சாயத்துகளுக்கு இடையில்தான், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் வர இருக்கின்றன. எனவே கூட்டணி கட்சிகளுக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த விஜய் முடிவெடுத்திருந்தார். அதன்படி கடந்த 1ம் தேதி விஜய் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ஆனால், அதில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பங்கேற்கவில்லை. இப்படியே போனால்.. கூட்டணியில் விரிசல் என செய்திகளில் எழுதிவிடுவார்கள் என்று பயந்த தவெக அமைச்சர்கள்.. செப்.8ம் தேதி நடக்கும் 2ம் கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை பங்கேற்க.. நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
இது தமிழக அரசியலில் கவனம் பெற்றிருந்தது. இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயலாளர் வீரபாண்டியன், "தவெக அமைச்சரவையிலும், கூட்டணியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறவில்லை. இடம்பெறவும் மாட்டோம். தவெக கூட்டணியின் முதல் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. வரும் 9ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கட்சி முடிவு செய்யும். முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். ஜனநாயக நாட்டில் கருத்து சொல்வது இயல்பானது.
நாங்கள் மத்தியில் பாஜக அரசு நீடிக்க கூடாது என்பதற்காகத்தான் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து வருகிறோம். பாஜக அரசு நாடாளுமன்ற ஜனநாயகத்தை அப்பட்டடாக மீறுகிறது. பாஜகவை வீழத்துவது இந்தியா கூட்டணியின் கடமை. எனவே இந்தியா கூட்டணியை வலுப்படுத்த உள்ளோம்" என்று கூறியிருக்கிறார்.
இந்தியா கூட்டணியை வலுப்படுத்துகிறோம் என்றால்? தவெகவை டீலில் விட கம்யூனிஸ்ட்டுகள் ரெடியாக இருக்கிறார்களா? அல்லது மத்தியில் இந்தியா கூட்டணி, மாநிலத்தில் தவெகவுக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுக்கிறார்களா? என்று விஜய் குழப்பமடைந்திருக்கிறார். இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை ஸ்மூத்தாக எதிர்கொள்ளலாம் என்று நினைத்தால்.. கூட்டணி வண்டி இப்படியே போகிறதே! என்று இடதுசாரிகளின் முடிவால் விஜய் டென்ஷனாகியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
