சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல்:2016-ல் அனல் பறந்த வாக்குப் பதிவு.. 2021-ல் தீயா வேலை செஞ்சும் சூடு குறைஞ்சு போச்சே குமாரு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் 72.76% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2016 தேர்தலில் மொத்தம் 74.26% வாக்குகள் பதிவாகி இருந்தன.

Recommended Video

    சென்னை: தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு.... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழக சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகளை முன்வைத்து நேற்று பகல் முதலே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. அதிகளவில் மக்கள் வாக்குகள் செலுத்தி வருவது மகிழ்ச்சி தருகிறது என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

    Comparison of Polling Percentage with 2016 and 2021

    அதேநேரத்தில் மக்கள் அதிக அளவு வாக்கு செலுத்துவது என்பது அரசுக்கு ஆதரவானது என்றும் இல்லை... இல்லை.. அரசுக்கு எதிரானது என்றும் வலதுசாரிகள் முகாம்களிலேயே உள்குத்து நிகழ்ந்தது. கடந்த 2016 தேர்தலில் அதிமுக கூட்டணி 1% வாக்கு வித்தியாசத்தில் வென்றது.

    அப்போதைய வாக்கு சதவீதம் 74.26%. அதனால் அதிக அளவில் வாக்குகள் விழுந்தால் நிச்சயம் ஆளும் கட்சிக்கே ஆதரவானது என்கிற வியாக்யானமும் கூட முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இறுதியான வாக்குப் பதிவு விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் மொத்தம் 72.78% வாக்குகள் பதிவாகி உள்ளது.

    பொதுவாக பார்க்கும் போது இந்த வாக்கு சதவீதம் கணிசமானது; அதிகமானது என்கிற தோற்றம் இருக்கிறது. ஆனால் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் நிச்சயம் குறைவுதான். அதுவும் பல தொகுதிகளில் 80% வாக்குகள் பதிவாகி இருந்த போதும் ஒட்டுமொத்த மாவட்ட நிலவரங்களை ஒப்பிடுகையில் அங்கே மொத்த வாக்கு பதிவு சதவீதம் குறைவானதாகவே இருக்கிறது.

    மாவட்டங்களில் 2016-ல் பதிவான வாக்குகள் சதவீதம்; 2021-ல் பதிவான வாக்குகள் சதவீதம் ஒப்பீட்டை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம்:

    Comparison of Polling Percentage with 2016 and 2021
    English summary
    Here is a comparison story of Polling Percentage with 2016 and 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X