விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம்...சிக்கிய 2 ஆய்வாளர்கள்...லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு
சென்னையில் குற்றப்பிரிவு ஆய்வாளர், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றிய போது புரோக்கர்களிடம் பணம் பெற்று வழக்கு பதியாமல் விட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்த அடிப்படையில் தற்போது இரண்டு ஆய்வாளர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளாராக பதவி வகிப்பவர் சாம் வின்சென்ட், சென்னை சைதாப்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக பணி புரிபவர் சரவணன் இவர் இருவரும் முன்னர் விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்களாக சென்னையில் பணியாற்றினர். 2018 ஆம் ஆண்டு ஜன.8 முதல் 2018 ஆம் ஆண்டு மே.15 வரை இருவரும் விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர்களாக பணியாற்றினர்.

விபச்சார புரோக்கர்களுடன் கூட்டு
கைது செய்யாமல் இருக்க கையூட்டு
அப்போது விபச்சார புரோக்கர்கள் பூங்கா வெங்கடேசன், டெய்லர் ரவி உள்ளிட்டோரிடம் அவர்களை கைது செய்யாமல் இருக்கவும் தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபட அனுமதிக்கவும் லஞ்சம் பெற்று கண்டுக்கொள்ளாமல் விட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் குவிந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியதில் புகார் உண்மை எனத் தெரிந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 13(2)r/w 13(1)(d) PC act, 1988 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவர் வீடுகளிலும் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கீழ்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளராக தற்போது பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சாம் வின்செண்ட் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். சைதாப்பேட்டை காவல் ஆய்வாளராக பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் புழுதிவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர்கள் இருவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏவிஎஸ் ஊழல் அதிகாரிகளின் விருப்பமான துறை
ஊழல் அதிகாரிகள் விரும்பும் ஏவிஎஸ்
ஏவிஎஸ் என்று அழைக்கப்படும் விபச்சாரத்தடுப்புப்பிரிவுக்கு செல்ல நேர்மையற்ற போலீஸார் அதிகம் விரும்புவார்கள். காரணம் அவர்கள் கேட்காமலேயே லட்சக்கணக்கில் பணம் குவியும். இதுவரை விபச்சாரத்தடுப்பிரிவு போலீஸார் மேல்மட்ட அளவில் நடக்கும் விபச்சாரத்தை ரெய்டு செய்து பிடித்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவர். அதற்கு காரணம் இதுவரை மேல்மட்ட அளவில் பெரிய அளவில் நடக்கும் விபச்சாரத்தில் யாரும் கைது செய்யப்படாததே.
வளம் கொழிக்கும் ஏவிஎஸ் டிபார்ட்மெண்ட்
பணம் கொழிக்கும் விபச்சாரத்தடுப்புப் பிரிவு
விபச்சார புரோக்கர்களுடன் கைகோர்த்து செயல்பட்டு பெரிய அளவில் பணம் கைமாறுவது வழக்கமான விஷயமாகி போனதால் வழக்குகள் அதிகம் பதிவாகாமல் இருக்கும் நிலை, சில நேரம் சாதாரணமாக வழக்குகளை பதிவு செய்வது வாடிக்கையாக நடக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுவதை மறுக்க முடியாது என்பதை இந்த ரெய்டு எடுத்துக்காட்டுகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications