Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆருத்ரா பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு நூதன மோசடி.. மாதந்தோறும் மளிகை+கமிஷன்.. கம்பிநீட்டிய கும்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ. 2,438 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் ஒரு தம்பதியர் நடத்திய நிறுவனம் நூதன முறையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வட்டி பணம் தருவதாக கூறி ஆருத்ரா, ஹிஜாவு போன்ற நிதி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நிதி நிறுவனங்களை சேர்ந்த பலரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறார்கள். மக்களிடம் மோசடி செய்யப்பட்ட பணம் மூலம் வாங்கி குவிக்கப்பட்டுள்ள சொத்துகளை முடக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

Complaint against Moha exports company for money fraud like aarudhra scam

இந்த மோசடி பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் மேலும் ஒரு நூதன மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது தெரியவந்துள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியில் 'மோகா எக்ஸ்போர்ட்ஸ்' என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த தம்பதியர், நூற்றுக்கணக்கானோரிடம் நூதன முறையில் பண மோசடியை அரங்கேற்றி உள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஒருமுறை முதலீடு செய்தால் மாதம்தோறும் வீடு தேடி மளிகைப் பொருட்கள் மொத்தமாக வரும். அதனைப் பிரித்து 'பேக்கிங்' செய்து வழங்கினால் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கமிஷன் வழங்கப்படும். ஓராண்டு முடிந்த பின்னர் முதலீடு பணம் திரும்ப வழங்கப்படும் விளம்பரம் செய்துள்ளனர்.

Complaint against Moha exports company for money fraud like aarudhra scam

கவர்ச்சிகரமான இந்த விளம்பரத்தை நம்பி நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தை நடத்திய தம்பதியர் ஒரு சில மாதங்கள் மட்டும் கமிஷன் தொகை வழங்கினர். மற்றவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று ஊழியர்கள் மூலம் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நிறுவனம் இயங்கி வந்த வீட்டை நேற்று முன்தினம் இரவு, ஊழியர்கள் காலி செய்து கொண்டிருந்தனர். இதுபற்றி தகவலறிந்து அங்குவந்த பாதிக்கப்பட்ட மக்கள், ஊழியர்கள் சிலரை பிடித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Complaint against Moha exports company for money fraud like aarudhra scam

பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று மதியம்திரண்டு, தங்களை ஏமாற்றியவர்களைக் கைது செய்ய வேண்டும், தங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜான் பிரிட்டோ, காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தருவோம் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார் மனு எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வசம் இந்த வழக்கு விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆருத்ரா மோசடி வழக்கு விசாரணை தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதேபோல மற்றொரு நிறுவனம் மீதும் புகார் கிளம்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+