டிடிஎஃப் வாசன் மீது கேஸ்..முடிஞ்சா அண்ணன் விஜே சித்துவ புடிங்க.! பறந்த மீம்ஸ்..போலீசுக்கு போன புகார்
சென்னை: கார் ஓட்டிக்கொண்டு செல்போன் பேசியதாக பிரபல யூட்யூபரான டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்ட நிலையில் இதே போன்று வீடியோ வெளியிட்ட பிரபல யூடியூபரான விஜே சித்து மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் விஜே சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதி வேகமாக வாகனம் ஓட்டியது சட்ட விரோதமாக இளைஞர்களை கூட்டி சந்திப்பு நிகழ்த்தியது என பல சர்ச்சைகளில் சிக்கி கடைசியில் விபத்தில் காயமடைந்த டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.

2கே கிட்ஸ்கள் ஹீரோவாக பார்க்கும் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் அவரைப் போன்றே இளைஞர்கள் கெட்டுப் போவதாக புகார்கள் எழுந்தது.தொடர்ந்து பல வழக்குகளில் சிக்கி சிறை சென்ற டிடிஎப் வாசன் தற்போது மீண்டும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
டிடிஎப் வாசன்: கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் சாலையில் அதிவேகமாக சென்ற போது வீலிங் செய்ய முயன்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்த அவரது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் விபத்தில் சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த டிடிஎப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் ஜாமினில் வெளிவந்த அவரது லைசன்ஸ் கேன்சல் செய்யப்பட்டது.
பரபரப்பு புகார்: தொடர்ந்து பைக்கை ஓட்டாமல் வீடியோக்களை வெளியிட்டு வந்த டிடிஎஃப் வாசன் தற்போது கார் ஓட்டியவாறு வீடியோ ஒன்றை யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். அப்போது காரை ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்து நண்பர்களுடன் பயணித்த, டிடிஎஃப் வாசன் செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டிய வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இதை அடுத்து அவர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளதோடு போலீசாரை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர் நெட்டிசன்கள்.
அதிரடி கைது: மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூபில் வெளியிட்டார்.இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டிடிஎப் வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
விஜே சித்து: இதனிடையே வாசனைத் தொடர்ந்து விஜே சித்துவுக்கு எதிராக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. முன்பு தனியார் யூடியூப் சேனலிலும் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிய விஜே சித்து தற்போது விஜே சித்து விலாக்ஸ் என்ற youtube சேனலை தொடங்கி இருக்கிறார். அவரை சுமார் 2.58 லட்சம் மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்கின்றனர். மேலும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக நடிகர்களை அழைத்து வந்து மொட்டை மாடி பார்ட்டி என்ற ப்ரோக்ராமையும் நடத்தி வரும் அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
கமிஷனர் ஆபிஸில் புகார்: இந்த நிலையில் செல்போனில் பேசியபடி காரை ஓட்டியதாக சித்துவுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் பிரபல youtubeரான யூடியுப் வாசன் மீது இதே புகார் எழுந்த நிலையில் முடிந்தால் எங்கள் அண்ணன் விஜே சித்துவை கைது செய்யுங்கள் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டனர். இதையடுத்தே தற்போது விஜே சித்து மீது புகார் எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் டிடிஎஃப் வாசனுக்கு ஒரு சட்டம்..விஜே சித்துவுக்கு ஒரு சட்டமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications