வசமாக சிக்கிய நயினார் நாகேந்திரன்.. அப்பா யாருனு அம்மாவிடம் கேளுங்க.. விஜய் பற்றிய சர்ச்சையில் டிஜிபியிடம் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தயார் பற்றி அவதூறான, இழிவான மற்றும் மரியாதைக்குரிய கருத்துகளை பொதுவெளியில் பேசிய நியனார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை திருமுல்லையவாயலை சேர்ந்த பெண் வழக்கறிஞர் வர்த்தினி டிஜிபியிடம் ஆன்லைனில் புகார் அளித்துள்ளார்.

complaint-files-against-nainar-nagendran-after-his-remarks-about-indecent-remarks-about-cm-vijay

தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார். இந்நிலையில் தான் சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ இதழான 'ஒரே நாடு' பத்திரிகையின் இரண்டாம் பதிப்பான 'ஒரே நாடு 2.0' அறிமுக விழா நடந்தது. இந்த விழாவில் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார்.

நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''சட்டமன்றத்தில் போய் அப்பாவை எங்கே அப்பாவை எங்கே என்று தேடுகிறார்கள். வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால் தானே அப்பா யார் என்று கேட்டால் தானே சொல்வாரகள். ஆனால் சட்டமன்றத்தில் போய் அப்பாவை எங்கே? அப்பாவை எங்கே? என்று கேட்கிறார்கள்.இப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது'' என்றார்.

நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. நடிகர் விஜய் மற்றும் அவரது தாயாரை பற்றி நயினார் நாகேந்திரன் அவதூறாக பேசியதாக தவெகவினர் கொந்தளித்தனர் இதுதொடர்பாக தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை மதுரவாலை சேர்ந்த வர்த்தினி என்ற வழக்கறிஞர் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ''சில நிமிடங்களுக்குமுன்பு தொலைக்காட்சியில் நயினார் நாகேந்திரன் ஒரே நாடு 2.0 நிகழ்ச்சியில் பேசியதன் காணொளியை பார்த்தேன். அதில் முதலமைச்சர் விஜய், அவரது தாயாரை குறிவைத்து மிகவும் இழிவான அவதூறான மற்றும் மரியாதைக்குறைவான வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். அதனை கண்டு ஒரு பெண்ணாகவும், தயாகவும் மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன்.

இப்புகாரை முறையாக பதிவு செய்து சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை உடனடியாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பேசிய முழுமையான உரையை பெற்று அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் மற்றும் அவற்றின் சூழ்நிலையை விசாரிக்க வேண்டும். அவரது பேச்சு தொடர்பாக இந்திய சட்டங்களின் கீழ் குற்றம் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரித்து பொருந்தக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக அவதூறு, திட்டமிட்டு அவமதித்தல் பெண் மீது இழிவான/அவமரியாதையான கருத்து, ஆபாசமான அல்லது சட்டவிரோதமான உள்ளடக்கத்தை பொதுவெளியில் பரப்புதல் உள்ளிட்ட குற்றங்கள் நடைபெற்றுள்ளனவா? என்பதை விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சமூக ஊடக பதிவுகள், வீடியோ பதிவுகள் மற்றும் அவற்றின் பரவல் தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும். இந்த பேச்சு குற்றமாக இருப்பது விசாரணையில் தெரியவந்தால் உரிய குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கும், கடுமையான வமிர்சனங்களுக்கும் முழுமையான இடம் இருக்க வேண்டும். ஆனால் அரசியல் விமர்சனத்தின் பெயரில் தனிநபர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் இழவுப்படுத்தும் நடைமுறை அனுமதிக்க கூடாது'' என கூறப்பட்டுள்ளது. இந்த புகாரால் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+