“ஒரு நாளைக்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கர்நாடகாவுக்கு போகுது..” லாரி உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு!
சென்னை: தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை அதிகரித்திருப்பதாகவும், இப்படியே போனால் 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மலைகளே இல்லாத சூழல் ஏற்பட்டு விடும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தினமும் தமிழ்நாட்டிலிருந்து மலைகள் உடைக்கப்பட்டு 1 லட்சம் டன் கனிமங்கள் கர்நாடகாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 5000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் இயங்கி வருகின்றன. காஞ்சிபுரத்தில் மட்டும் 162 கிரஷர்கள் இயங்கி வருகின்றன. மலையை தெய்வமாக வழிபட்டு வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிக அளவு மலைகளை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த கிரஷர்கள் ஒரு மணி நேரத்திற்கு 500 டன்களை அரைக்கும் திறன் கொண்டது. அதாவது மலைகளை சிறிய பாறைகளாக வெட்டி, பின்னர் கிரஷர்கள் மூலம் துண்டுகளாக்கப்பட்டு கடத்தப்படுகிறது. இப்படியான கிரஷர் இயந்திரங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. செங்கல்பட்டில் ஒரு பழைய அமைச்சருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இருக்கிறது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அரசு அதிகாரிகளும், நிர்வாகத்துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கனிமவளத் துறையில் போய் கேட்டபோது, நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அங்கு சென்று கேட்டால், மாசு நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வது மட்டும்தான் எங்களுடைய வேலை. கொள்ளை தடுப்பது எங்களுடைய வேலை இல்லை என்று சொல்கிறார்கள்.
இப்படி தமிழ்நாட்டில் இயங்கும் 5000 கிரஷர்களுக்கு சட்டதிட்டங்கள் எதுவும் கிடையாது. சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டால் கனிமவள கொள்ளையடிக்க முடியாது என்பதால் சட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை. இந்த முறைகேட்டை படித்த அதிகாரிகளே செய்கிறார்கள்.
இதில் நாங்கள் எங்கே சிக்குகிறோம் என்றால், கிரஷரில் அரைக்கப்படும் கனிமங்கள் எங்களுடைய லாரியில் தான் எடுத்துச் செல்லப்படுகிறது. தனிமங்களை நாங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்களுடைய பணி. ஆனால் நாங்கள் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவதைப் போல லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜகபர் அலி, லாரி மோதி பலியானார். ஆனால் இந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்று பல்வேறு அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து குவாரி உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை நடத்தப்படுகிறது என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் விமர்சித்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications