"பறையா (Pariah)".. வார்த்தையைவிட்டு.. சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை! போலீசுக்கு பறந்த புகார்! வழக்கா?
சென்னை: டிவிட்டரில் சாதி பெயரை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நாடு முழுக்க பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். பாஜக சார்பாக பல்வேறு இடங்களில் இதற்காக சிறப்பு கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் ஆட்சியை பாராட்டி அண்ணாமலை ட்விட் செய்து இருந்தார். கடந்த 8 வருடங்களில் இந்தியா மாபெரும் மாற்றத்தை சந்தித்து இருப்பதாக அண்ணாமலை ட்விட் செய்து இருந்தார்.

அண்ணாமலை பாஜக
அதில், பறையரில் இருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் (From a pariah to a ViswaGuru) என அண்ணாமலை பாராட்டி குறிப்பிட்டு இருந்தார். அண்ணாமலை இப்படி பறையா என்ற வார்த்தையை பயன்படுத்தியது சர்ச்சையாகி உள்ளது. ஆங்கிலத்தில் pariah என்ற வார்த்தையை ஒதுக்கப்பட்டவர்.. கடைசியில் இருப்பவர்.. அல்லது ஓரம்கட்டப்பட்டவர் என்ற பொருளில் பலர் இப்போது பயன்படுத்த தொடங்கி உள்ளனர். ஆங்கில எழுத்தாளர்களும் இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.

பறையா வார்த்தை
இந்த நிலையில்தான் அண்ணாமலையும் இந்த வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால் பொருள்படி இந்த வார்த்தை ஜாதி ரீதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவை குறிக்கும் வார்த்தை ஆகும். Britannica பொருள்படி.. தமிழ் நாட்டில் இருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவினரை குறிக்கும், ஜாதி ரீதியான சொல் (இகழும் வகையில் பயன்படுத்தப்படும்) என்று pariah என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் pariah என்ற வார்த்தையை அண்ணாமலை பயன்படுத்தியது சர்ச்சையாகி உள்ளது.

புகார்
இதையடுத்து தற்போது டிவிட்டரில் சாதி பெயரை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய கோரி புகார் அளிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் முருகன் என்பவர் அண்ணாமலைக்கு எதிராக புகார் அளித்துள்ளார். முன்னதாக அண்ணாமலை பறையா என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக விசிக வன்னி அரசு விமர்சனம் செய்து இருந்தார். அதில், பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி.

வன்னி அரசு
சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அண்ணா வணக்கம்! கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில - தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்!, என்று விளக்கம் அளித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications