ஒரே இருட்டு.. சுற்றி அடித்த சூறைக்காற்று.. சென்னையில் நிலவரம் என்ன? தலைநகரில் இதை நோட் பண்ணீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் இரவில் தொடங்கிய கனமழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.
வடகிழக்கு பருவமழையின் வீரியம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் சென்னையில் பெய்ததை விட இந்த வாரம் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
முக்கியமாக அடுத்த மூன்று நாட்கள் சென்னையில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை
சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழை என்பது இந்த மழையின் தொடக்கம்தான். இன்று அதிகாலையில் இருந்துதான் மழை தீவிரம் அடைந்து உள்ளது. அதோடு இன்று மாலைக்கு பின் மழை மேலும் தீவிரம் அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் சென்னையில் மழை பெய்த போது பல இடங்களில் தண்ணீர் வேகமாக வடிந்தது. 300 மிமீ மழையை கூட சென்னை எளிமையாக சமாளித்தது. ஆனால் இன்று அதை விட அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வெள்ளம்
இதனால் மழையை சென்னை சமாளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து மிக கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 8 மணி கடந்த பின்பும் கூட சென்னை இருட்டாக காணப்பட்டது. அதிகாலை 4 மணி போல சென்னை கும்மிருட்டாக இருந்தது. கடந்த வாரங்களில் மழை பெய்தாலும் காலை 8 மணியில் இருந்து மாலை வரை கொஞ்சம் வெப்பம் இருந்தது. அதன்பின் மீண்டும் மாலைக்கு பின் மழை பெய்தது.

மழை
ஆனால் இன்று சென்னையில் அதிகாலையில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. அதோடு சென்னையில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை போல கனமான மழை பெய்தது. அதாவது "பொத்து பொத்து" என்று கனமாக மழை அடித்து ஊற்றியது. சில இடங்களில் சூறை காற்று வீசியது. காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.

விடாமல் மழை
அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. மேலும் 3- 4 மணி நேரங்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சென்னை - புதுச்சேரி நெடுஞ்சாலையில் கனமழை பெய்து வருகிறது. வங்ககடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. இது அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு நோக்கி நகரும். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்யும். இன்று சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications