“நீங்கள் ஏந்திய செந் தீ சுடர்விட்டு எரியும்”.. செங்கொடி போராளி நல்லகண்ணுவுக்கு உருக்கமான கவிதை!
சென்னை: முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தமது 101வது வயதில் நேற்று காலமானார். வாழ்நாளெல்லாம் தூய்மையான மக்கள் நல அரசியலின் முன்னுதாரணமாக, இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டான தலைவராக வாழ்ந்து மறைந்தவர் நல்லகண்ணு.
தோழர் நல்லகண்ணுவின் மறைவு தமிழக மக்களுக்குப் பேரிழப்பு என்றால் மிகையில்லை. நல்லகண்ணுவின் மறைவையடுத்து அமெரிக்காவின் டெக்சாஸில் ஆஸ்டின் நகரில் வசிக்கும் நமது ஒன் இந்தியா தமிழ் வாசகர் மாணிக்கம் விஜயபானு கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கவிதை பின்வருமாறு:

செங்கொடி போராளி ( 1924 - 2026 )
பசிக்குச் சோறும்
படுக்க அரையடி
இடமும் தவிர்த்து
மனித உரிமை
குரல் நெரித்த போது
பண்ணையடிமை
அதிகார ஒழிப்பு சட்டம்
போராடி
மக்கள் அடிநெஞ்சில்
செங்கொடி தாங்கி
ஓங்கி நின்றவர்
கொடுஞ்சிறை
அடித்துப் புரட்டிய போதும்
வருடத்தின் நாட்காட்டி
எப்போதும்
வலித்து கடந்த
நாட்களாய் நகர்ந்தாலும்
நெஞ்சுரம் மட்டும்
தளர்ந்து
எப்போதும் நின்றதில்லை
வாழ்வில் போராட்டம்
என்பதை
போராட்டமே வாழ்க்கையென
கடைசி வரை
அன்போடு
அரவணைத்தவர்
எண்ணிச் சொல்ல
ஒன்றா இரண்டா
தோழரே உங்கள்
பயணம்
ஆங்கிலேய எதிர்ப்பு
உளுத்த சோள எதிர்ப்புத் தினம்
விவசாய உரிமை
நில உச்சவரம்பு மசோதா
நிலமீட்பு
சாதி ஒழிப்பு
எண்ணித் தீராது
இந்த சுவடுகள்
எளிமை என்ற சொல்லை
அதைவிட
எளிமையாக வாழ்ந்து
காட்டியவர்
குடும்பம் உறவு
கடந்து
என் நாடு என் மக்கள்
உறவை
கடைசிவரை
காதலித்தவர்
அரசு கௌரவமும்
கட்சிக் கொடையும்
சுற்றம் நட்பு
பகிர்ந்த நிதியும்
மக்களுக்கே அர்ப்பணித்து
அமைதியாய் புன்னகைத்து
கடந்தவர்
தேர்வு செய்த
கொள்கை மட்டுமே
இடதுசாரி
அதில் தோழர்
பதித்த பாதச்சுவடு
எப்போதும்
இடது வலது இன்றி
அடித்தட்டு
மக்கள் உரிமை
கேட்கும்
நேர்கோட்டு பாதை
உழைப்பும் உரிமையும்
மறுத்து
போராட்டமும் நீதியும்
வெல்லும்
ஒவ்வொரு நிகழ்விலும்
நீங்கள் ஏந்திய
செந் தீ
உங்கள் பெயர் சொல்லி
சுடர்விட்டு
அணையாது எரியும்
எப்போதும்
செய்த தொண்டிற்கும்
காட்டிய எளிமைக்கும்
அதிகார வர்க்கத்தை
கடைசி வரை
எதிர்த்த
நெஞ்சுரத்திற்கும்
பாதம் தொட்ட
என்
செங்கொடி வணக்கங்கள்!
ஓய்வெடுங்கள் தோழரே.
- மாணிக்கம் விஜயபானு
ஆஸ்டின், டெக்சாஸ்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications