Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஐஸ் அவுஸில் தன்னார்வலருக்கு கொரோனா.. உணவு வாங்கி சாப்பிட்ட போலீஸ் உள்பட 80 பேர் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரிடம் உணவு வாங்கி சாப்பிட்ட காவலர்கள், மின் ஊழியர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

    அதிகாரிகள் மீட்டிங்கில் எடப்பாடியார் செம அப்செட்

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ளன.

    சென்னையில் ஊரடங்கில் சில உணவகங்களே திறந்து உள்ளன. அந்த உணவகங்களிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே தருகிறார்கள்.

    உணவு அளிக்கிறார்கள்

    உணவு அளிக்கிறார்கள்

    இதனால் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாத பலர் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இதனால் தன்னார்வலர்கள் சிலர் தாங்களாகவே வீடுகளில் உணவு சமைத்து பார்சல் மூலம் சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்கள். இதேபோல் 24 மணி நேரமும் மக்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கும் தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகிறார்கள். மேலும் துப்புரவு பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கும் தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகிறார்கள்.

    உணவு விநியோகம்

    உணவு விநியோகம்

    அந்த வகையில் சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தன்னார்வலர் ஒருவர் தனது வீட்டில் சமைத்த உணவுகளை தினமும் ஐஸ் அவுஸ் பகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு, போலீசாருக்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு, மின்வாரிய ஊழியர்களுக்கு உணவு பொட்டங்களாக வழங்கி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் உணவு வழங்கி வந்தார்.

    சோதனையில் உறுதி

    சோதனையில் உறுதி

    இந்நிலையில் அந்த தன்னார்வலருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று முன்தினம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். அந்த பரிசோதனையில் உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அவரை கொரோனாவுக்காக மாற்றப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பிசிஆர் சோதனை

    பிசிஆர் சோதனை

    இதையடுத்து சுகாதார பணியாளர்கள், தன்னார்வலரிடம் தினமும் உணவு வாங்கி சாப்பிட்ட நபர்கள் குறித்து கணக்கெடுத்தனர். அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் 40 காவலர்கள், மின்வாரிய ஊழியர்கள்,, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்கள் என 80க்கும் மேற்பட்டோர் தினமும் அந்த தன்னார்வலரிடம் உணவு வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள மாநகாட்சி சுகாதார மையத்தில் அனைவரும் நேற்று காலை ஒரே நேரத்தில் குவித்தனர். அவர்களில் குறிப்பிட்ட நபர்களுக்குமே மட்டுமே பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. மற்றவர்களை அரசு மருத்துவனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் ஐஸ் அவுஸ் பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+