விஜய் உயிருக்கு ஆபத்து? பாஜக மீது பகீர் புகார்! டிஜிபி ஆபீஸுக்கு ஓடிய காங்கிரஸ் புள்ளி! பரபர தமிழகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்று தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவாகி இருந்தாலும் அறுதி பெரும்பான்மை பெறாததால் ஆட்சியமைக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை கைப்பற்றி, மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை இல்லாததால், அக்கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Congress Vijay tvk

234 உறுப்பினர்கள் கொண்ட தமிழக சட்டப்பேரவையில், சாதாரணமாக 118 உறுப்பினர்களின் ஆதரவு ஆட்சியமைக்க தேவை. ஆனால் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அதனால் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 233 ஆக குறையும். இதனால் பெரும்பான்மைக்கான கணக்கும் 117 ஆக மாறும். இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள் விஜய்க்கு ஆதரவு கடிதம் வழங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில், விஜய் காங்கிரஸ் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இருப்பினும், தேவையான முழு பெரும்பான்மை ஆதரவு பட்டியல் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், உடனடியாக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவை பெறவும் தவெக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் விஜய்க்கு பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து நெருக்கடி அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக டிஜிபி இடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மேற்கு காங்கிரஸ் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான டில்லி பாபு இது தொடர்பாக காவல் துறை தலைவரிடம் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில்," தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தமிழக மக்கள் எதிர்பார்த்து இந்த வெற்றியை உறுதி செய்து விஜய் ஆட்சி அமைக்க உள்ளார். இந்த நிலையில் அவர் ஆட்சி அமைக்க கூடாது என பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் அவருக்கு எதிராக சூழ்ச்சியும் செய்கின்றனர்.

இப்படி விஜய்க்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவரது உயிருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விஜய்க்கும் அவரது எம்எல்ஏக்களுக்கும் விஜய் உடன் கூட்டணி சேர்ந்திருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என கூறி இருக்கிறார். காங்கிரசின் இந்த திடீர் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+