காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை!
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 28 சட்டசபை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ராஜ்யசபா எம்.பி ஆகிறார்.

தொகுதிப் பங்கீட்டின்போது நடந்த இழுபறி காரணமாக காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்குமா அல்லது வெளியேறுமா என்று பல்வேறு பேச்சுகள் எழுந்தன. 30-க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இறுதியில் பேச்சுவார்த்தை நிறைவடைந்து 8 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடமும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 சட்டசபை தொகுதிகள் எவை எவை என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோனை நடத்தப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்த ஆலோசனையில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக கூட்டணியில் 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிர்வாகிகளுடன் முக்கிய விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏக்களாக உள்ள தொகுதிகள் அத்தனையையும் மீண்டும் எதிர்பார்க்கிறது. அதேபோல, மதுரை வடக்கு உள்ளிட்ட சில தொகுதிகளை காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்த்து வருகின்றனர். அதில் திமுக ஸ்ட்ராங்காக உள்ள சீட்களும் அடக்கம்.
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டின்போது சீட் நம்பர் இறுதி செய்வதிலேயே இழுபறி நடந்து வந்த சூழலில், எந்தெந்த தொகுதிகள் என்பதை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்படுமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications