7 பேர் மட்டும் தான் தமிழர்களா? பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் நாளை அறப்போராட்டம்!
சென்னை: ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா? என்றும் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமல் இருக்கும் மற்றவர்கள் தமிழர்கள் இல்லையா எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வினவியுள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியினர் நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு அறப்போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்;

ராஜீவ்காந்தி கொலை
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரைஉச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதேஉச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலைசெய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை.

நிரபராதிகள் அல்ல
அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள்அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம். கொலை செய்தவர்கள்தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களைவிடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள்.

தமிழர்கள் இல்லையா?
பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவிடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யவேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை ?அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ?ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள்இதற்கு பதிலளிக்க வேண்டும்.

அறப்போராட்டம்
நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமைகாலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமானஇடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம்,கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதியபதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரைஅறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications