“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்
சென்னை: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று இரவுக்குள் வெளியிடுவார் என தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு தாமதமாகி வரும் நிலையில், இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகள் பட்டியலையும் திமுக தலைமை கடந்த மார்ச் 28 ஆம் தேதியே அறிவித்துவிட்டது.

திமுக கூட்டணி வேட்பாளர்கள்
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து, பல கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. வேட்பு மனு தாக்கள் தொடங்கி 4 நாட்கள் ஆகும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், காங்கிரஸ் சார்பில் இன்னும் பிரச்சாரம் தொடங்கப்படாத நிலை உள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் திண்டலில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், மொடக்குறிச்சி, பவானி உள்ளிட்ட 8 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவுக்குள் - ஸ்டாலின்
இன்று திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், "ஈரோடு கிழக்கு தொகுதியின் அன்பு சகோதரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அவரது மகன் திருமகன் ஈவேராவும் நின்று வெற்றி பெற்ற தொகுதி. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளாரை அன்பு சகோதரர் ராகுல் இன்று இரவுக்குள் அறிவிக்க இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த ஈரோடு மாவட்டத்தில் இருந்து 9 பேர் திமுக கூட்டணியில் போட்டியிடுகின்றனர். அவர்களை வெற்றிபெற வைத்து சட்டப்பேரவைக்கு நீங்கள் அனுப்ப வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
ஸ்டாலின் பேச்சு
தொடர்ந்து மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல திராவிட பேரூர்தான் இந்த ஈரோடு. திராவிடத்தின் வேரான ஈரோட்டில் நமக்கு வெற்றி நிச்சயம். திராவிட மாடல் அரசு என்பது 'டெவலப்மென்ட்' அரசாக, அனைத்துத் தரப்பு மக்களுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் அரசுதான் இந்த திமுக அரசு.
வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது திமுக அரசு. மஞ்சள் ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தது, அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியது, பேரூராட்சி சார்பில் 70 பூங்காக்களை அமைத்தது,ஈரோட்டில் கல்வி, வேளாண்மையில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு தான்.
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி
ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், மகளிருக்கு கட்டணம் இல்லா விடியல் பயணம் திட்டம் என திமுக அரசின் திட்டங்களால் வீட்டிற்கு ஒருவர் பயனடைகிறார். புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி, பெண்கள் பெயரில் சொத்துகள் வாங்கும் போது பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, குடும்ப வன்முறை, குழந்தை பாலியல் வன்முறை போன்றவைகளுக்கு மரணதண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை என திமுக அரசு பெண்கள் நலனுக்காக பல திட்டங்களைச் செய்து வருகிறது. திமுக ஆட்சியில் 60 நாட்களுக்குள் 86 சதவிகித குற்ற வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகமாக பெண்கள் பணிக்குச் செல்வது தமிழ்நாட்டில் தான். ஏனெனில் இங்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்புடன் இருப்பதால் தான் பெண்கள் தைரியமாக வேலைக்கு செல்ல முடிகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி பொறாமையால் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி.
அதிமுக ஆட்சியில் டிஜிபியால் பெண் எஸ்.பிக்கு நடந்த பாலியல் சம்பவத்தை மறக்க முடியாது. அந்த டிஜிபி-யை பாதுகாத்தது அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். அந்த வழக்கிலும் தண்டனை வாங்கிக் கொடுத்தது திமுக ஆட்சியில் தான். தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வழக்கில் சிக்கியவர் அதிமுக கூட்டணியில் உள்ளார். தமிழ்நாட்டிற்கான சாதனை எனக் கூற பிரதமரிடம் எதுவும் இல்லை. தமிழ்நாட்டிற்கு பாஜகவின் துரோக பட்டியல் திமுகவிடம் உள்ளது." எனப் பேசினார்.
இன்று இரவு காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை
சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் 6ஆம் தேதி கடைசி நாள் என்பதால், இன்று இரவு நடைபெறும் இந்த முக்கியக் கூட்டத்தில் இறுதிப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, உடனடியாக காங்கிரஸ் தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
வாஷிங் மெஷின் வாங்க ரூ.8000! அடமானமில்லா 5 லட்சம் கடன்! வைரலாகும் திமுக கனிமொழியின் முதலீடு தந்திரம் -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே












Click it and Unblock the Notifications