திருச்சியை திணறடித்த நாம் தமிழர், மநீம.. கூட சேர்ந்து வெளுத்த அமமுக.. அதிர்ச்சியில் "பெருசுகள்"
திருச்சியில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் இடையே கடும் போட்டி ஏற்பட்டு வருகிறது.
Recommended Video
சென்னை: திருச்சி தொகுதியில் பெரிய பெரிய கட்சிகளுக்கு டஃப் கொடுத்து மேலே வந்து அசத்தியுள்ளனர் நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும்!
இருக்கும் 40 தொகுதிகளில் எந்த தொகுதிக்கு போட்டி இருந்ததோ இல்லையோ.. ஆனால் இந்த திருச்சி மீது மட்டும் எல்லாருக்குமே ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது!
திமுக தரப்பில் முதன்முதலில் இந்த தொகுதியை கேட்டது வைகோதான். அதற்கு முன்பே திருச்சி எப்பவுமே நமக்குதான் என்று நம்பி இருந்தவர் தயாநிதி மாறன். இதில் திடீரென சம்பந்தமே இல்லாமல் சபரீசனின் பெயரும் அடிபட்டது. ஆனால் காங்கிரஸ் தரப்பில் டெல்லி லாபி மூலம் திருச்சியை திருநாவுக்கரசர் கேட்கவும்.. ஒட்டுமொத்த பேரும் கப்சிப்!

சாருபாலா தொண்டைமான்
அதேபோல, திமுக, அதிமுக கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் சரி, ஒரு செல்வாக்கு மிக்க நபரை தனது கட்சி சார்பில் நிறுத்த முடிவு செய்த டிடிவி தினகரன், அதன்படி சாருபாலா தொண்டைமானை களம் இறக்கினார். இவரது மூதாதையர்கள் புதுக்கோட்டையில் மன்னராக இருந்ததாலும், இப்போதும் சாருபாலாவுக்கு திருச்சியில் நல்ல மதிப்பு இப்போதும் உள்ளது. மேயராக இருந்தவர். வாண்டையர் சமூகத்தின் ஓட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் விஜயகுமார் களம் இறங்கினார். இவருக்கு இது சொந்த தொகுதிதான். தேமுதிகவுக்கு இங்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது என்றும் நம்பப்பட்டது. இப்படி அதிமுக, திமுக, அமமுக தரப்பில் ஜாம்பவான்கள் களமிறங்கினர். ஆனால் இப்போது இந்த லிஸ்ட்டில் இல்லாத நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யமும் இந்த பிரமாண்ட கட்சிகளுக்கு டஃப் கொடுத்து கொண்டுள்ளன.

தேமுதிக
வாக்கு எண்ணிக்கையின் 9ம்சுற்று முடிவில் காங்கிரஸ் திமுக கூட்டணி- 2,70,753 ஓட்டுகளை பெற்றுள்ளது. அதிமுக தரப்பில் தேமுதிக 76,460 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட காங் வேட்பாளர் திருநாவுக்கரசர், 1,94,293 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அமமுக 44,382 வாக்குகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

மக்கள் நீதி மய்யம்
ஆனால் இதை விட பெரிய மேட்டர் இதுதான்.. 22,216 வாக்குகள் பெற்று மக்கள் நீதி மய்யம் அதிர வைத்துள்ளது. அதேபோல 28,449 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சியும் சரிக்கு சரியாக போட்டி போட்டு மேலே வருகின்றன. கமலும், சீமானும் ஒட்டுமொத்த திருச்சி தொகுதி வாக்குகளை பிரித்துள்ளனர் என்பதைதான் இந்த வாக்கு எண்ணிக்கை காட்டுகிறது. அதாவது அதிமுகவை வெல்ல விடாமல் தடுத்துள்ளனர் இந்த இருவரும்.

திருச்சி மக்கள்
மாற்றத்தை நோக்கி பயணிக்க திருச்சியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் தயாராகி விட்டனர் என்பதும் நிரூபணமாகி வருகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications