அப்பாவோடு கனவு இது... "பையனை" அனுப்பிய காங்... பொன்னாரை சமாளிக்க இதுதான் ஒரே வழி.. மிரண்டு போன பாஜக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக விஜய் வசந்த் நிறுத்தப்பட்டுள்ளார்.. இவரின் தேர்வு கன்னியாகுமரி அரசியலில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல்… அப்பா தொகுதியில் மகன் போட்டி!

    தமிழக சட்டசபை தேர்தலோடு சேர்த்து தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியின் எம்பியாக இருந்தவர் மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்த குமார்.

    கொரோனா காலத்தில் மக்களுக்கு இவர் சேவை செய்து நலத்திட்டங்களை மேற்கொண்டு வந்தார். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்.. மரணம் அடைந்தார். இதனால் தற்போது கன்னியாகுமரி தொகுதிக்கு லோக்சபா இடைத்தேர்தல் வருகிறது.

    பாஜக

    பாஜக

    இந்த தொகுதியில் பாஜக சார்பாக மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்படுகிறார். இங்கு இவருக்கு அதிக அளவில் ஆதரவு இருக்கிறது. அதேபோல் ஏற்கனவே எம்பியாக இருந்தவர். தமிழகத்தில் இருந்து மீண்டும் ஒரு பாஜக எம்பியை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக மீண்டும் இவரை களமிறக்கி உள்ளது.

    உறுதி

    உறுதி

    இவர் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் பாஜக தேசிய தலைமை உறுதியாக இருக்கிறது. இதனால்தான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவே இங்கு நேரடியாக வந்து பிரச்சாரங்களை மேற்கொண்டார். இவரை எப்படியாவது வெற்றிபெற வைத்துவிட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    அதே சமயம் காங்கிரஸ் சார்பாக மறைந்த வசந்த குமார் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பாக இவர் கன்னியாகுமரியில் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பாக வேறு சில மூத்த உறுப்பினர்கள் களமிறங்க வாய்ப்புள்ளது என்று பேசப்பட்ட நிலையில் விஜய் வசந்த் இறக்கப்பட்டுள்ளார்.

    என்ன

    என்ன

    இங்கு போட்டியிட ஆசை என்று விஜய் வசந்த் முன்பே விருப்பம் தெரிவித்து இருந்தார். அப்பாவின் தொகுதி எனக்கு கிடைத்தால் சந்தோசம்தான் என்று விஜய் வசந்த் குறிப்பிட்டு இருந்தார். அவர் கேட்டது போலவே தற்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    இவருக்கு கண்டிப்பாக அனுதாப வாக்கு கிடைக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது. இவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.. அப்பாவும் பொது சேவை செய்துதான் மரணம் அடைந்தார். இதனால் கண்டிப்பாக அனுதாப அலை வீசும் என்று காங்கிரஸ் தரப்பு நம்புகிறது. என்னுடைய அப்பாவிற்கு நிறைய கனவு இருந்தது. குமரியை முன்னேற்ற நிறைய திட்டம் வைத்து இருந்தார்.

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    அந்த திட்டங்களை கண்டிப்பாக நான் நிறைவேற்றுவேன் என்று நேற்று இரவே விஜய் வசந்த் மிகவும் உருக்கமாக பேசினார். விஜய் வசந்த் இங்கு வேட்பாளராக வருவார் என்பது பாஜக எதிர்பார்த்த ஒன்றுதான்.ஆனால் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு பொன்னார் தரப்பை கொஞ்சம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக பணிகளை தொடங்கி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+