தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! விஜய் கட்சியின் பலம் என்ன? இன்னும் எவ்வளவு தேவை?
சென்னை: காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில் தவெகவின் பலம் எவ்வளவு என்பதை பார்க்கலாம். 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெகவுக்கு ஆதரவு என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்றுள்ளது. பெரும்பான்மைக்கு 118 தேவைப்படுகிறது. இதனால் விஜய் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பெறுவார் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் 108 தொகுதிகளில் விஜய் இரு தொகுதிகளில் வென்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய நேரிடும். இதனால் தவெகவின் பலம் 107 ஆக குறைகிறது.
தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியிடம் தவெக கேட்டுக் கொண்டது. இதுகுறித்து ராகுல், கார்கேவிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விவாதித்தனர்.
இந்த நிலையில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை கொண்டு வர தவெகவுக்கு ஆதரவு தருகிறோம்.
பிரிவினைவாத சக்திகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது. பெரியாரின் சமூகநீதி, அம்பேத்கரின் அரசியலமைப்பு கொள்கையின்படி தவெக காங்கிரஸ் கூட்டணி அமையும்.
சட்டசபை தேர்தலுக்கு ஆட்சி அமைக்க மட்டும் இந்த ஆதரவு இல்லை, உள்ளாட்சித் தேர்தல்,2029 லோக்சபா தேர்தல், ராஜ்யசபா தேர்தல்களிலும் விஜய் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் திமுக- காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கூட்டணி தொடர்ந்த நிலையில் தற்போது முறிந்தது. எனவே தவெகவின் பலம் என்ன என்பதை பார்க்கலாம்.
தவெக 107
காங்கிரஸ் - 5
மொத்தம் 112 இடங்கள் வரை தற்போது கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்கு இன்னும் 6 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்களை வைத்துள்ளன. எனவே அவர்கள் ஆதரவை தவெக பெற முயற்சித்து வருகிறார்கள்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications