ராகுல்காந்தி விரைவில் சென்னை வருகிறார்... பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இம்மாத இறுதியில் சென்னை வரவுள்ளதால் அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முகாம் சற்று சுறுசுறுப்பு அடைந்து வருகிறது. இப்போதே தேர்தல் பணிகளை தொடங்குவது பற்றி ஆலோசித்து வருகிறது. மேலும், கூட்டணிக் கட்சிக்கு தலைமை தாங்கும் திமுகவிடம் இருந்து இந்த முறை கூடுதல் எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.சீட்களை பெற திட்டமிடுகிறது. இதனிடையே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணிப் பாதை எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடும் அது தனிக்கதை.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் ஒரு அயர்வு தெரிவதால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுலை தமிழகம் அழைத்து வருகிறார் கே.எஸ்.அழகிரி. இதற்காக கடந்த மூன்று மாதங்களாக முயற்சித்து எப்படியோ ஒரு வழியாக ராகுலின் தமிழக பயணத்திட்டத்தை உறுதிப்படுத்திவிட்டார் கே.எஸ்.அழகிரி. இம்மாத இறுதியில் தமிழகம் வரும் ராகுல் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவார் எனக் கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் காங்கிரஸ் ஏற்பாட்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அந்தக் கூட்டத்திற்கு ஸ்டாலினையும் அழைத்து காங்கிரஸின் பலத்த உணர்த்த வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் தலைவர்களின் திட்டம். இதற்காக இடம் தேர்வு, அனுமதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ராகுல் தமிழகம் வரும்போது திமுக தலைமையிடம் பேச வேண்டிய விவகாரங்களை அவர் காதில் போடவும் இங்குள்ள தலைவர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே சென்னையை தவிர்த்து திருச்சி, மதுரை, கோவை ஆகிய மூன்று ஊர்களில் ஏதேனும் ஒரு ஊரில் பொதுக்கூட்டம் நடத்தலாமா என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி யோசித்து வருகிறது. மாணிக்கம் தாகூர் மதுரையில் நடத்துமாறு வலியுறுத்தி வரும் நிலையில், மயூரா ஜெயக்குமார் கோவையில் பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என விருப்பப்படுகிறார்.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
செல்வப்பெருந்தகை தூக்கப்படுகிறாரா? ராகுலுக்கு போன "ரகசிய ஆதாரம்" அடுத்ததாக அந்த கட்சியில் இணைகிறாரா? -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை!












Click it and Unblock the Notifications