Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 அமைச்சர் பதவி வேண்டும்.. இல்லைன்னா விஜய் கிட்ட போயிடுவோம்.. காங்கிரஸ் பளீர் பிளான்.. திமுக ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தரப்பிடம் 6 பெரிய அமைச்சரவை பதவிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அமைச்சரவை பதவிகளை கொடுப்பதாக உறுதி அளித்தால் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று காங்கிரஸ் கூற உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில், நாளை மாலை 4 மணிக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்.மேலிடத் தலைவர்கள் முன் கூடுகிறது. இதில் இந்த முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் திமுக மீது இந்திய தேசிய காங்கிரஸ் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. கூடுதல் இடங்களையும், முதன்முறையாக மாநில அமைச்சரவையில் பங்கு கோரியும் காங்கிரஸ் திமுகவிற்கு பிரஷர் போட தொடங்கி உள்ளது. திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கக் காங்கிரஸ் திட்டம். குறைந்தது ஆறு அமைச்சர்களைப் பெற்றாக வேண்டும் என்று காங்கிரஸ் உறுதியாக உள்ளதாம்.

Congress increase wants 6 minister posts in DMK alliance Cabinet or it may go for TVK alliance

தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியில் கூட்டணி விவாதம் தீவிரமடைந்துள்ளது. நீண்டகால கூட்டணிக்கட்சியான திமுகவுடன் தொடர்வதா அல்லது நடிகர்-அரசியல்வாதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்ப்பதா என்பது குறித்து காங்கிரசுக்குள் வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

காங்கிரஸ் தலைவர்களில் ஒரு பிரிவினர், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது சிறந்தது என வாதிடுகின்றனர். தவெகவுடன் இணைந்தால், அதிக தொகுதிகளில் போட்டியிடவும், மாநில அரசில் அமைச்சர் பதவிகள் உட்பட பெரும் பங்கைப் பெறவும் முடியும் என நம்புகின்றனர். அறிமுகக் கட்சியாக இருப்பினும், தவெக சுமார் 20% வாக்கு சதவீதத்தைப் பெறக்கூடும் என்றும் இந்த பிரிவு கருதுகிறது.

தற்போதுள்ள 4% வாக்கு சதவீதத்தை உயர்த்தவும், ஆட்சி எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைத்து பாஜகவின் அரசியல் களத்தை சுருக்கவும் தவெக வுடனான கூட்டணி உதவும் என அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனினும், ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள், திமுகவுடன் கூட்டணியை தொடர வலியுறுத்தியுள்ளனர். வரவிருக்கும் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை இதற்குக் காரணம்.

கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யைச் சந்தித்ததால், திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேபோல, டிசம்பர் 3 அன்று மாநில பொறுப்பாளர் கிரீஷ் சோடன்கர் உள்ளிட்ட தலைவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்திருந்தனர். விஜய்யுடனான சந்திப்புக்குப் பிறகு, சக்கரவர்த்தி தனது எக்ஸ் (X) பதிவில், தமிழ்நாட்டின் நிலுவைக் கடன் உத்தரபிரதேசத்தை விட அதிகம் என்றார்.

சக்கரவர்த்தியின் பதிவு, திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் கடன் குறித்த அவரது கூற்று பதற்றமூட்ட கூடியது, தவறானது என்று ப. சிதம்பரம் மறுத்தார். சில நாட்களுக்குப் பிறகு மு.க. ஸ்டாலினை சந்தித்த ப.சிதம்பரம், தனது சக்கரவர்த்தியின் அறிக்கையுடன் தான் உடன்படவில்லை என வெளிப்படையாகக் கூறினார்.

சக்கரவர்த்தியின் கருத்து, திமுக கூட்டணியில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது. கூட்டணியைக் காப்பாற்ற ராகுல் காந்தி தலையிட வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் கோரின. ராகுல் காந்தி, ஸ்டாலினை "சகோதரர்" என்று குறிப்பிடும் சூழலில், காங்கிரஸ் தலைவர்கள் திமுக அரசை விமர்சிப்பது துரோகம் என திமுக தலைவர்கள் கருதினர். இப்போது மாணிக்கம் தாக்கூர் எம்பி போன்றவர்கள் ஆட்சியில் பங்களிப்பு கேட்டு திமுகவை நேரடியாக சீண்டி வருகின்றனர். இது திமுகவிற்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

திமுக திட்டம் என்ன?

தி.மு.க. தனது இடப்பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவை இன்னும் அமைக்கவில்லை. பொங்கலுக்கு பின்பே இந்த குழுவை திமுக அமைக்கும் என்று கூறப்படுகிறது. 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18ல் வென்ற காங்கிரஸ், தற்போது 35 முதல் 50 தொகுதிகள் வேண்டும் எனக் கோரி வருகிறது.

எங்களுக்கு எம்எல்ஏ சீட் மட்டும் கிடைத்தால் போதாது. எங்களுக்கு அமைச்சரவை பதவி தேவை. ஆட்சியில் பங்கு தேவை. நீங்கள் மெஜாரிட்டி ஆட்சி அமைத்தால் அது நடக்காது. அதனால் மைனாரிட்டி இடங்களில்தான் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று திமுகவை காங்கிரஸ் நெருக்கடி கொடுக்க தொடங்கி உள்ளதாம்.

தற்போது தமிழக அமைச்சரவையில் 35 பேர் திமுகவினர், வேறு கட்சிக்கு இடம் இல்லை. ஆனால் அடுத்த முறை திமுக மைனாரிட்டி இடங்களில் போட்டியிட வேண்டும் அல்லது தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட ஆட்சியில் கூட்டணியினருக்கு இடமளித்த ஆந்திரப் பிரதேச மாதிரியை திமுக இங்கே பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளதாம்.

திமுகவை நெருக்கும் காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வெளிப்படையாக நம்மிடத்தில் பேசினர். "சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களையும், அதிகாரத்தில் பங்கையும் கேட்பது எங்கள் உரிமை" என்கின்றனர். அதிகாரப் பங்கீட்டின் ஒரு பகுதியாக ஐந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும் காங்கிரஸ் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாங்கள் கேட்பதை எல்லாம் கொடுக்க.. நாங்கள் கேட்டதை விட அதிகமாக கொடுக்க.. விஜயின் தவெக தயாராக இருக்கிறது. எங்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க.. எங்களுக்கு அமைச்சர் பதவிகளை கொடுக்க.. எங்களுக்கு மாநிலங்களவையில் பதவிகளை கொடுக்க தவெக ரெடியாக இருக்கிறது. இனி நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று திமுகவிற்கு காங்கிரஸ் பிரஷர் போடுகிறதாம்.

விசிக

தி.மு.க.வின் முக்கியக் கூட்டணியால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (VCK) அதிகாரப் பங்கீட்டுக் கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்துள்ளது. நிர்வாகத்தில் கூட்டணிக் கட்சிகள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றன என்று அதன் தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏற்கனவே கூட்டணியில் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் தி.மு.க. விளக்கம் கோரியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் வளர்ச்சிக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், ஆட்சி மட்டத்தில் தி.மு.க.வை பலவீனப்படுத்தும் முயற்சிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணிக்கு தரும் ஆதரவை சுட்டிக்காட்டி.. ராகுல் காந்தி ஸ்டாலினை அண்ணன் என்று அழைக்கிறார்.. திமுகவை நம்புகிறார். ஆனால் தமிழக காங்கிரஸ் அப்படி இல்லை. தமிழக காங்கிரஸ் கூட்டணியை உடைக்கலாமா என்று நினைக்கிறது. அது சரியில்லை. ராகுல் இதில் தலையிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று திமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் காங்கிரசுக்கு திமுக தாண்டி பெரிய ஆப்ஷன் இருக்காது. ஒன்று திமுக, இல்லையென்றால் தனித்தே கூட்டணி உருவாக்க வேண்டும். அதிமுக பாஜகவுடன் இருப்பதால் அங்கே செல்ல முடியாது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.. இப்போது தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது.

காங்கிரஸ் பிரஷர் போடுகிறது

இதனால் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு பிரஷர் போடுகிறதோ என்று தோன்றுகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய சில நாட்களிலேயே அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை சந்திக்கிறார். விஜயிடம் பேசுகிறார். அதேபோல் விஜயை பாராட்டி போஸ்டுகளை செய்கிறார்.

திருச்சி வேலுசாமி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக உடன் ஒரே மேடையில் கிறிஸ்துமஸ் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இப்படி தொடர்ந்து காங்கிரஸ் திமுகவிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் நெருக்கடி கொடுப்பது திமுகவிற்கு பிரஷரை கூட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+