வருமானவரி வழக்கால் விஜயை அவமானப்படுத்திய காங்கிரஸ்.. தயாநிமாறன் சொன்ன பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது. நேற்றைய நிகழ்வில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அmப்போது திமுக மீதும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு புகார்களை குறிப்பிட்டார். இந்நிலையில் விஜய் மீதான வருமானவரித்துறை வழக்கை குறிப்பிட்டு, அவரை காங்கிரஸ் அவமானப்படுத்தியது தொடர்பாக தயாநிதிமாறன் பிளாஷ்பேக் சொல்லியுள்ளார்.

திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "ஊழலைப்பற்றிப் பாடம் எடுக்கும் உத்தமரே! ஊரெங்கும் நடக்கும் கொலைகளுக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன தொடர்பு?. அமலாக்கத்துறையில் அதிக வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கட்சியோடு கூட்டணி வைத்திருப்பது யார்? அரசியல் காரணமாக அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு ஆவணங்களையும் முதலமைச்சர் அடுத்த முறை வாசிப்பாரா?

Vijay Congress

காங்கிரஸால் விஜய்க்கு அவமானம்

உலக நாடுகள் முன்னிலையில் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர் என் தந்தை மறைந்த திரு.முரசொலி மாறன். வல்லரசு நாடுகளுடன் வாதிட்ட வல்லமையாளர். உள்ளூர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவே அஞ்சும் ஒரு முதலமைச்சர் மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களைப் பற்றிப் பேசலாமா? அவரைக் கொச்சைப்படுத்தும் முதலமைச்சர் அவர்கள், அதே முரசொலி மாறனின் மகனான எனது அழைப்பை ஏற்று, ஜனவரி 2006-இல், அப்போதைய பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, "பொங்கல் சிறப்பு தபால் தலை" வெளியிடும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளவிருந்தார்.

அந்த சமயத்தில், திரு.விஜய் அவர்கள் மீது வருமானவரி வழக்கு நிலுவையில் உள்ளதால், அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சியில் திரு.விஜய் அவர்களை மேடையில் ஏற்றக் கூடாது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் எதிர்ப்பினை கடுமையாக தெரிவித்தனர். உடனடியாக அதற்கு ஆட்சேபனையைத் தெரிவித்து, திரு.விஜய் அவர்களை மேடையில் நிற்க வைத்து, தபால் தலையை பெறுவதற்கான உரிய மரியாதையை வாதாடி அவருக்கு பெற்றுத் தந்தது முரசொலி மாறன் மகன்தானே?

மறந்துவிடக்கூடாது

அந்த தபால் தலையை பெற்றுக் கொண்டு சிரிக்கும்போது, இப்போதைய ஞானோதயம் இல்லாமல் ஞானசூனியமாக இருந்தாரா? முதலில், ஊழலைப் பற்றியோ மிசாவைப் பற்றியோ பேசும் அருகதை இந்த முதலமைச்சருக்கு உள்ளதா? போர்பந்தரில் பிறந்தவரின் வாரிசாக தன்னைத் தானே யாரும் நினைத்துக் கொள்ளக்கூடாது... இந்த வீராதி வீரர் கொடநாட்டில் தனது திரைப்படத்திற்காக, ஒருநாள் முழுவதும் அங்கேயே காத்திருந்து, வீடியோவில் கைகட்டி வாய்பொத்தி முனகியதையும் மறந்துவிடலாகாது.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லை என்றால் இப்படித்தான் ஆகஸ்ட் 2026-இல் நடந்த கொலைகளுக்கு எமெர்ஜென்சி காலத்தில் அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைய அறிக்கையில் பதில் தேட வேண்டியிருக்கும்! தேடி முடிக்கும் முன் அடுத்த கொலைகள் நடந்தேறிச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது" என்று கூறியுள்ளார். அவரின் பதிவு வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+