ரஜினி யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும்.. ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது.. மாஜி காங்.தலைவர்
சென்னை: ரஜினி நல்ல நண்பர். அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம் ஆளுநர் ஆர் என் ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினர். இதை ரஜினியே தெரிவித்திருந்தார்.
இருவரும் அரசியல் பேசியதாக தெரிவித்தார். அது போல் ஆன்மீகம் குறித்து நானும் ஆளுநரும் விவாதித்தோம் என தெரிவித்திருந்தார். ரஜினியை முன்னிறுத்தி பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகையில் அரசியல் பேசியது குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில் ஆளுநர் ஒரு கட்சியின் பிரதிநிதியாக செயல்படவும் கூடாது. அப்படி இருக்கையில், பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கான அரசியலை பேச வேண்டிய அவசியம் எதனால் வந்தது.

அதிகார வரம்பு
அதிகார வரம்பு மீறியே செயல்படும் ஆளுநரின் இந்த போக்கினை இன்னும் எத்தனை காலம் பொறுத்துக் கொள்ளப் போகிறோம்?" "ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது ஏற்புடையதே. ஆனால் அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கே. வீ. தங்கபாலு
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே வீ தங்கபாலு கூறுகையில் ரஜினி நல்ல நண்பர். அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். ஆனால், தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு. ஏனென்றால் இது பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி உருவாக்கிய மண் என தங்கபாலு தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் போல் அல்லாமல் பாஜக தலைவர் போல் செயல்படுகிறார் என்றும் ஆளுநர் மாளிகையும் பாஜக அலுவலகம் போல் செயல்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ரஜினி ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து அரசியல் பேசினோம் என கூறியது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications