"150 ஆண்டுகால அரசியல்.. தமிழக மக்கள் பாஜகவை உள்ளே விட மாட்டார்கள்!" பாயும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: இந்தி திணிப்பு, ஆளுநர்களின் செயல்பாடு ஆகியவை குறித்து இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கி பேசினார்.
Recommended Video
நாகப்பட்டினம் விருந்தினர் மாளிகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான இ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது இந்தி திணிப்பு குறித்து கடுமையாக எதிர்த்துப் பேசிய இ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்துப் பேசினார்.

இந்தி திணிப்பு
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய இ.வி.கே.எஸ்.இளங்கோவன், "இந்தியாவின் அலுவல் மொழிகளில் இந்தியும் ஒன்று. 1932 முதல் இந்தி திணிப்பை எதிர்த்து வருகிறோம். இந்தியாவில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வருகிறார். இலங்கையில் இயற்கை முறையில் விவசாயம் செய்த காரணத்தால் தான் இப்போது பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறார்கள். பிரமதர் மோடிக்கும், அமித்ஷா வுக்கும் இந்தி பேசும் மாநிலங்கள்தான் தேவை. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் தேவை இல்லை.

மு.க. ஸ்டாலின்
மோடியை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தியாக, எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமிழக மக்களின் உரிமைகளைக் காக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். நாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக அதிமுக சார்பாக வரி உயர்வு போராட்டங்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறது. வரி உயர்வு ஏன் என்பதைத் தமிழக அரசு சட்டசபையில் தெளிவாக விளக்கி இருக்கிறது.

ஆளுநர் செயல்பாடுகள்
எடப்பாடி மற்றும் ஓபிஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், ஸ்டாலின் அளவிற்கு உயர்ந்து நிற்க முடியாது. புதுச்சேரி மற்றும் சென்னையில் ஆளுநர்களின் செயல்பாடுகள் நிறைய மோசமாக உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தைக் குடியரசு தலைவருக்கு அனுப்ப மறுத்தவர் தமிழக ஆளுநர். அரசியல் சாசனத்தின் படி நடக்கத் தெரியாமல், தான்தோன்றித் தனமாகத் தமிழக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார்.

அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் ஒன்றைப் பேசி வருகிறார். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல் முருகனுக்கு பதவி கிடைத்தது போல தானும் பதவி பெறவே பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் திமுகவுக்கு எதிராகப் பேசி வருகிறார். அந்தமானில் ஆளுநர் பொறுப்பு வாங்க அண்ணாமலை துடிக்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலைக்குத் தகுந்த இடம் திருவண்ணாமலை. அங்கே பல சித்தர்கள் இருக்கிறார்கள் அங்கே இவரும் ஒரு சித்தராக இருக்கலாம்.

150 ஆண்டுக்கால அரசியல்
தமிழக அரசியலைப் புரட்டி விடலாம் என அண்ணாமலை பேசி வருகிறார். 150 ஆண்டுக்கால அரசியலைப் பின்பற்றுகின்ற மாநிலம் தமிழகம். இங்கே குஜராத்தைப் போலவே, உத்திர பிரதேசத்தைப் போல மடத்தனமாக மக்கள் இல்லை, விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். பாஜகவை மக்கள் உள்ளே விட மாட்டார்கள். அண்ணாமலையின் சத்தங்களுக்குச் செவி சாய்த்து விரைவில் மோடி ஒரு அரசாங்க பதவியைக் கொடுப்பார். திமுக அதிமுகவுக்கு அடுத்து தமிழகத்தில் காங்கிரஸ்தான்.. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக அகில இந்தியக் கட்சி அல்ல, மாவட்ட கட்சி" என்று அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications