மேட்டர் சீரியஸ்.. கண்டிப்பாக செஞ்சே ஆகனும்! செல்வப்பெருந்தகையின் கோரிக்கை..முதல்வருக்கு பறந்த அறிக்கை!
சென்னை: மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சிங்கம்பட்டி வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலைத்தோட்டம் அமைந்துள்ளது.

அங்கு நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்குப் பெற்று மும்பையைச் சேர்ந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவனம் தேயிலைத் தோட்டங்களை அமைத்தது. தற்போது அப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற உத்தரவுபடி அந்நிறுவனம் வெளியேறுகிறது.
மாஞ்சோலை எஸ்டேட்: இதனால் அங்கு வாழும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உள்ளது. இதனை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில், மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் 95 ஆண்டுகளாக தொழிலாளர்கள் அங்கேயே தங்கி தேயிலை தோட்டங்களில் வேலை செய்து வருகின்றனர்.
ஏழை தொழிலாளர்கள்: இங்குள்ள நிலங்கள் 99 ஆண்டுகளுக்கு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலப்பகுதிகளில் காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற பணப் பயிர்கள் பயிரிட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து கூலி வேலைகளுக்கு ஆட்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களால் உருவானது தான் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியாகும். இதில் பணியாற்றுகிற 80 சதவிகிதத்தினர் பட்டியலினத்தைச் சார்ந்த ஏழை எளிய தொழிலாளர்களாவார்கள். இவர்களது வாழ்வாதாரமே மாஞ்சோலை எஸ்டேட்டை நம்பித்தான் இருக்கிறது.
காப்பு காடு: இந்நிலையில், மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 8373 ஏக்கர் மற்றும் அம்பை பகுதியில் அமைந்துள்ள 23,000 ஏக்கரையும் காப்பு காடாக கடந்த 28.2.2018 இல் அரசிதழில் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாத இறுதிக்குள் எஸ்டேட்டை காலி செய்து விட்டு அனைவரும் வெளியேற வேண்டுமென எஸ்டேட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ஐந்து தலைமுறைகளாக இந்த மலைப் பகுதியில் வாழ்ந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்த இவர்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த வீடோ, வீட்டு மனையோ இல்லாமல் நிராயுதபாணிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
வேறு தொழில் தெரியாது: மேலும், இவர்களுக்கு பாரம்பரியமான தோட்ட தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது. இத்தகைய பின்னணியில் உள்ள தொழிலாளர்களை திடீரென வெளியேற்ற முற்படுவது அப்பட்டமான தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும். கடந்த காலங்களில் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட அகதிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்திருக்கிறோம்.
முதல்வருக்கு கோரிக்கை: அதுபோல, மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், ஆயிரக்கணக்கான தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு தேயிலை தோட்ட தொழிலையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இப்பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications