'நாய்கள்' .. செல்வப்பெருந்தகை சொன்னதுமே சட்டென குறுக்கிட்ட சபாநாயகர்.. அண்ணாமலை ரியாக்சனை பாருங்க
சென்னை: காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்ற யூகத்தில் பேசுகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேசினார்கள்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ராஜ்பவனில் 45 நாட்களுக்கு மேலாக தூங்குகிறது. இது தவறு- மத்திய அரசில் உள்ள பாஜக அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் தான். புதிய ஆட்சி மத்தியில் ஏற்படும். அதற்கு வழிகாட்டியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பார். அண்ணா பல்கலைக்கழகம் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றி ஆளுநர் பேசுவாரா? சமூக நீதியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆளுநர் மாளிகையை அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக மாற்றி வருகிறார்.
தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளாகியுள்ளார். ஆளும் அரசின் மீது வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடு மன்னித்து வருகிறார். முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
முன்னதாக சட்டசபையில் பேச ஆரம்பிக்கும் போது செல்வப்பெருந்தகை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மாண்புமிகு அமைச்சர்கள் வீடுகளில் எல்லாம், ஏதோ நாய் நுழைவது போல் நுழைகிறார்கள்.. அப்போது குறுக்கிட்ட அப்பாவு அந்த வார்த்தை வேண்டாம் சட்டசபை அவை குறிப்பில் நீக்கப்படும் என்றார். அதற்கு செல்வப்பெருந்தகை.. நான் யாரையோ சொல்கிறேன்.. யாரையும் புண்படுமாறு நான் கூறவில்லை என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்று பொருள்படும்படி பேசுகிறார்.
மாநிலத்தில் சிபிஐ-க்கு அளிக்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெறுவது, வருமான வரித்துறை அதிகாரிகளை காயப்படுத்துவது மற்றும் அரசு அதிகாரிகளை நாய்கள் என ஊகிப்பது ஆகியவை அதிகாரங்களை ஊழல் செய்ய பயன்படுத்தியதற்காக பிடிபடுவோம் என்ற பயத்தின் விளைவு மட்டுமே" என்று கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications