“செங்கோலுடன்” வடிவேலு..“வரலாறு முக்கியம்” என கூறி இம்சை அரசன் 24ம் புலிகேசி போஸ்டர் பகிர்ந்த ஜோதிமணி
சென்னை: இன்று நடைபெற்ற புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழாவில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு செங்கோல் வைக்கப்பட்டது விவாதப்பொருளாகி உள்ள நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி பேஸ்டரை பகிர்ந்து இருக்கிறார். பலரும் அந்த படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து இருக்கிறார். இதில் சோழர்களின் வழிப்படி, திருவாவடுதுறை ஆதீனம் இந்தியா சுதந்திரம் பெற்றப்போது நேருவிடம் வழங்கிய செங்கோல் வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

அதன்படி நேற்று மதுரை ஆதீனத்திடம் இந்த செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோடுக்கு நெடுஞ்சாண்கிடையாக மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அந்த செங்கோலை எடுத்துக்கொண்டு மக்களவைத் சபாநாயகர் இருக்கைக்கு சபாநாயகர் ஓம் பிர்லாவை அழைத்துக் கொண்டு ஏறிய மோடி, செங்கோலை அங்கு வைத்தார்.
இதற்கிடையே செங்கோல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களும், விமர்சனங்களும் வெளியாகின. மன்னராட்சியின் அடையாளமாக இருந்த செங்கோலை மக்களாட்சியின் சின்னமாக இருக்கும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்துவதா என்று எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிய பரமாசாரிய சுவாமிகள், "முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் 1947 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப்பட்டது உண்மை.
ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்கு செய்ததற்கான சான்றுகள் உள்ளன. நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதற்கான சான்றுகளும் இருக்கின்றன. நேரு செங்கோலை வைத்து இருக்கும் புகைப்படங்கள் ஆதீன புத்தகத்தில் உள்ளன. கண்ணாடி பெட்டியில் கடந்த 75 ஆண்டுகளாக வைக்கப்பட்டு இருந்த இந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கிறது.
அரசியல் லாபத்துக்காக சடங்குகளை பொய், போலி எனவும் கூறுவது வருத்தம் தருகிறது. நீதி மாறாமல் அரசு ஆட்சி செய்வதற்காக செங்கோல் வழங்கப்படுகிறது. நீதியுடன் ஆட்சி செய்யாவிட்டால் நிச்சயம் செங்கோல் தண்டிக்கும். மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுத்த வாங்கப்பட்டதற்கான பதிவுகளோ புகைப்படங்களோ மடத்திடம் இல்லை.
வரலாறு முக்கியம்:) pic.twitter.com/EbI5JItuxT
— Jothimani (@jothims) May 28, 2023
நேரில் பார்த்தேன் என்றும் என்னால் சொல்ல முடியாதே. அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டால் இதுபற்றி தெரியும். செங்கோல் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிகழ்வு எப்போது எங்கு நடந்தது என்றே எனக்கு தெரியாது." என்று தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் செங்கோலுடன் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பல்வேறு தரப்பினர் விமர்சித்து மீம்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் அடுத்த பாகமாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டு கைவிடப்பட்ட 24 ஆம் புலிகேசி படத்தின் பழைய போஸ்டர்களை பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் வடிவேலு செங்கோடுடன் இருக்கிறார். இதனை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமனி ட்விட்டரில் பதிவிட்டு "வரலாறு முக்கியம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications