மக்களே உஷார்! நல்லாட்சி வழங்க முடியாமல் பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளது பாஜக: ப.சிதம்பரம்
சென்னை: நல்லாட்சி தருவதில் தோல்வியடைந்துவிட்ட பாஜக, வாக்காளர்களை துண்டாடவும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவுமே பொது சிவில் சட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற முனைப்பில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. அதற்கான முன்னோட்டமாக பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் அமைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி "அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் பொது சிவில் சட்டத்தை உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறது. ஆனால் வாக்கு அரசியல் நடத்துபவர்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள். மக்களிடையே தவறான கருத்துகளை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்." எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பிரதமர் மோடியின் இந்த பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், "பொது சிவில் சட்டத்தை வலியுறுத்திப் பேசும்போது பிரதமர் மோடி நாட்டை ஒரு குடும்பத்துடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். மேலோட்டமாக பார்க்கும்போது இந்த ஒப்பீடு சரியாகவேத் தோன்றும். ஆனால், யதார்த்தம் வித்தியாசமானது. குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசம் அரசியல் ஆவணமான அரசியலமைப்புச் சட்டத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் வேற்றுமைகள் உண்டு. நமது அரசியலமைப்பு நாட்டு மக்களுக்கிடையே உள்ள வேற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கிறது. கொள்கையால் இயக்கப்படும் ஒரு பெரும்பான்மை அரசு அதனை மக்கள் மீது திணிக்க முடியாது. பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை எளிமையான ஒன்றாகக் காட்சிப்படுத்துகிறார். ஆனால் அது சாத்தியமற்றது என்பதைச் சட்ட அணையத்தின் அறிக்கையைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பாஜகவின் சொல்லாலும் செயலாலும் இன்று இந்திய நாடு பிளவுபட்டுள்ளது. மக்கள் மீது திணிக்கப்படும் இந்த பொது சிவில் சட்டத்தால் மேலும் மேலும் பிளவு ஏற்படும். பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசுவது பணவீக்கம், வேலையின்மை, மாநிலங்களின் உரிமைகள் பறிப்பது போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் செயல்.
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நல்லாட்சி தருவதில் தோல்வியடைந்துவிட்ட பாஜக, வாக்காளர்களை துண்டாடவும், அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவுமே பொது சிவில் சட்டத்தினை தற்போது கையில் எடுத்துள்ளது" என விமர்சித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications